50 வயதில் நடிகர் அரவிந்த் ஆகாஷ் திருமணம் – வைரலாகும் புகைப்படங்கள்
நடிகர் அரவிந்த் ஆகாஷின் திருமணம் மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதில் திரைப்பட இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் வைபவ் உள்ளிட்ட பலரும் பங்கேற்று மணமக்களை நேரில் வாழ்த்தினர்.
இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.

நடிகர் அரவிந்த் ஆகாஷ்
தமிழ் சினிமாவில் அறிமுகமான காலத்திலிருந்து பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் தான் அரவிந்த் ஆகாஷ், தனது திரைப்பயணத்தை 2000 ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நடித்த ‘ஹே ராம்’ திரைப்படத்தின் மூலம் தொடங்கினார்.
பின்னர் மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்த அவர், 2005-ம் ஆண்டு வெளியான ‘ஏபிசிடி’ திரைப்படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘உன்னாலே உன்னாலே’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
ஆனால் அவரது திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த படம், வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007-ம் ஆண்டு வெளியான ‘சென்னை 28’ தான். அந்த படத்தின் மூலம் அவர் ரசிகர்களிடையே தனித்த அடையாளத்தைப் பெற்றார்.
அதன்பின்னர் ‘கோவா’, ‘மங்காத்தா’, ‘பிரியாணி’, ‘சென்னை 28 இரண்டாம் பாகம்’ மற்றும் சமீபத்தில் ‘தி கோட்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களுடன் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார்.

தற்போது 50 வயதை எட்டியுள்ள அரவிந்த் ஆகாஷ், தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயமாக திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளார். அவரது திருமண புகைப்படங்கள் வெளியாகியதும் திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |