2027 சுக்கிரன் பெயர்ச்சி... ராஜயோகத்தினை பெறும் ராசியினர் யார் யார்?
சுக்கிரன் பெயர்ச்சி 2027ம் ஆண்டு ஜனவரி மாதம் நடக்கும் நிலையில், ராஜயோகத்தினை பெறும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
சுக்கிரன் பெயர்ச்சி
ஜோதிடத்தில் மங்களகரமான மற்றும் மென்மையாக கிரகம் என்று அழைக்கப்படும் சுக்கிரன், ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதியாகும்.
தற்போது சுக்கிரன் துலாம் ராசியில் புதனுடன் இணைந்துள்ளது. திருமண வாழ்வில் மகிழ்ச்சிக்கும், நிதி செழிப்பிற்கு்ம் காரணமாக இருக்கின்றது.
சுக்கிரனின் நிலை மாற்றங்கள் ஒவ்வொரு ராசியிலும் முக்கிய மாற்றத்தினை கொடுக்கின்றது. 2027ம் ஆண்டில் 1ம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடையும் நிலையில், ஜனவரி 29 வரை விருச்சிக ராசியில் நிலைத்திருக்குமாம்.
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் இருக்கும் நிலையில், சுக்கிரன் பெயர்ச்சியின் போது ராஜயோகத்தினை பெறும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

மிதுனம்
மிதுன ராசியில் இந்த சுக்கிர பெயர்ச்சியால் புத்தாண்டு முதல்நாளில் மன அமைதி கிடைக்குமாம். நினைத்த காரியங்கள் நடப்பதுடன், உடன் பிறந்தவர்களின் ஆதரவும் இருக்குமாம்.
உங்களது கடின உழைப்பிற்கான பலனை பெறுவதுடன், நிதி ரீதியாக வலுப்பெறுவதற்கான நேரம் இதுவாகும். வீடு, குடும்பம், சொத்து தொடர்பான தகராறுகள் தீர்க்கப்படுவதுடன், சிறு பயணங்கள் அதிக மகிழ்ச்சியையும் தருமாம்.
புத்தாண்டில் உங்களது வருமானம் பெருகுவதுடன், தேவையற்ற செலவுகளையும் குறைத்து கொள்வது நல்லது..

மேஷம்
மேஷ ராசியினருக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் செல்வம் பெருகுவதுடன், வேலை தொடர்பான பொறுப்புகளையும் நீ்ங்கள் எளிதாக கையாள்வீர்கள்.
திட்டமிட்ட பணிகள் சரியான நேரத்தில் முடிவடைவதுடன், உடல்நலம் உங்களது நல்ல ஆதரவு அளிக்கும். குடும்பத்தில் முன்னேற்றம் கிடைப்பதுடன், முதலீடு செய்யும் முன்பு மற்றவர்களிடம் கலந்து பேசவும்.
கடந்த காலத்தில் உள்ள கடன் பிரச்சனைகள் தீர்வதற்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். வீடு, வாகனம், சொத்து, வாங்குவதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.

மகரம்
மகர ராசியினருக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் அமைதி கிடைப்பதுடன், நிதி ஆதாயத்தினையும் பெறுவீர்கள். கடின உழைப்பாளிகளின் வாழ்க்கை பிரகாசமாகவே இருக்கும்.
திருமணம் மற்றும் தொழில் இவற்றில் முன்னேற்றம் கிடைப்பதுடன், குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கான பிரச்சனை தீரும். கடின உழைப்பின் பலன்களைப் பெறுவீர்கள்.
மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டை பெறுவதுடன், முடியாமல் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடிவிற்கு வரும். எந்தவொரு முடிவை எடுக்கும் முன்பு நம்பிக்கைக்குரியவர்களின் ஆலோசனையைப் பெறுவது சிறந்தது.

கன்னி
கன்னி ராசியினருக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் கடின உழைப்பின் பலன்களைப் பெறுவதுடன், தொழிலிலும் லாபம், மன அமைதி அதிகரிக்கும். பழைய பிரச்சனை அனைத்தும் முடிவிற்கு வரும்.
குடும்பத்தில் சுப காரியங்கள் நடப்பதுடன், நீண்ட கால இலக்குகளைப் பெறுவதற்கு சிறந்த நேரமாக இருக்குமாம். வெளிநாட்டு பயண வாய்ப்பு மற்றும் புதிய அனுபவம் கிடைக்கும்.
புதிய தொழில் தொடங்குவதற்கு இந்த புத்தாண்டு மிகவும் சாதகமாக உள்ளதுடன், வேலையிலும் எதிர்பாராத பணம் வந்து சேருமாம். சுக்கிரனின் அருளால் உங்களுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |