உங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி நல்லா வர்க் ஒவுட் ஆகுதா? இத வச்சி தெரிஞ்சிக்கோங்க!
காதலர்களுக்கிடையில் கெமிஸ்ட்ரி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அந்த வகையில் ஒருவரை பார்க்கும்போது ஏற்படும் சில விஷயங்கள் உங்களுக்கும் அவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி வர்க் ஒவுட் ஆவதை கூறுகின்றது.
அதாவது சில உள்ளுணர்வுகள் தோன்றும். அந்த உள்ளுணர்வுகள் நீங்கள் சரியான ஒரு நபரைத்தான் தேர்வு செய்துள்ளீர்கள் என்பதைக் காட்டும்.
சரி இனி அந்த உள்ளுணர்வுகள் என்னவென்று பார்ப்போம்.
image - live bold and bloom
ஒரே மாதிரியான பேச்சு - இருவரும் நிறைய விடயங்களை பகிர்ந்து கொள்வீர்கள். அதாவது எந்தவொரு விடயத்தைப் பற்றி பேசினாலும் அதன் உரையாடல் நீண்டதாக இல்லாமல் விரைவில் புரிந்துகொள்வீர்கள்.
கவனம் செலுத்துதல் - அதாவது கூட்டத்தில் இருக்கும்போது கூட உங்கள் கவனம் அவர் மீதுதான் இருக்கும். அந்த பார்வை எந்தவித சலிப்பையும் உங்களுக்கு ஏற்படுத்தாது.
சின்னச் சின்ன விடயங்களையும் செய்வீர்கள் - அவருக்கு பிடித்த சின்னச்சின்ன விடயங்களைக் கூட மிகவும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்து, அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளையும் பாராட்ட தொடங்குவீர்கள்.
image - wordpress.com
சந்திப்புகள் - அவர்களுடன் இருப்பது எப்போதும் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதால், அடுத்து அவரை எப்போது சந்திப்பேன் என எதிர்பார்த்து காத்திருப்பீர்கள்.
இதயத் துடிப்பு - அவரை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவரைப் பார்க்கும்பொழுது வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதைப் போன்ற ஒரு உணர்வும் இதயத்துடிப்பு அதிகமாவதையும் உணர்வீர்கள்.