பெண்களே ஆடைத் தெரிவில் கவனம் தேவை!
உண்மையில் நமது அழகை இன்னும் மெருகேற்றிக் காட்டுவதில் ஆடைகளுக்கு முக்கிய பங்குண்டு. ஆள் பாதி ஆடை பாதி என்பது முற்றிலும் உண்மையானதே.
குறிப்பாக பெண்கள் தாங்கள் அணியும் ஆடைகளை தங்களுக்கு பொருத்தமாக தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.
அழகான ஆடைகளே நமக்கு ஒரு வித தன்னம்பிக்கையைக் கொடுக்கும். சரி இனி அதற்கான சில குறிப்புக்களைப் பார்ப்போம்...
image - istock
நிறத்தேர்வில் தெளிவு இருக்க வேண்டும் - அடர் நிறமான மேலாடைகளைத் தெரிவு செய்யும்போது, அதற்கேற்றாற்போல் இலேசான நிறத்திலோ அல்லது அதற்கு ஒத்துப்போகும் நிறத்திலோ இணை உடையை தெரிவுசெய்ய வேண்டும்.
அதுமாத்திரமின்றி டிசைன்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
உள்ளாடையை கவனமுடன் தெரிவு செய்யவேண்டும் - நாம் அணியும் உள்ளாடை மிகவும் இறுக்கமாகவும் இருக்கக் கூடாது. அதேசமயம் மிகவும் தளர்வாகவும் இருக்கக்கூடாது.
இரண்டுமே நமது ஆடையின் அழகைக் கெடுத்துவிடும். எனவே அவை இரண்டும் சரியான அளவில் இருக்க வேண்டும்.
image - freepik
கண்களை உறுத்தாத வகையில் இருக்க வேண்டும் - நாம் அணியும் ஆடைகள் நவீனமயமாக இருந்தாலும் பிறரின் கண்களை உறுத்தாத வகையில் இருக்க வேண்டும்.
குறிப்பாக லெக்கின்ஸ் என்பவற்றை அணியும்போது மெல்லிய துணியாக தேர்ந்தெடுக்காமல் சற்று தடிப்பமான துணியாக தேர்ந்தெடுப்பது சிறந்தது.
நகைகள் - நாம் அணிந்துள்ள ஆடை ஆடம்பரமாக இருந்தால், சாதாரண நகைகளை அணியலாம். அது நம்மை மேலும் அழகாகக் காட்டும்.
image - istock