வீட்டில் சப்பாத்தி இருக்கா? ஃசெப் தாமுவின் முட்டை சாப்ஸ் செய்து சாப்பிடுங்க!
வீட்டில் நாம் இரவு நோர உணவிற்காக அதிகமாக செய்யும் உணவுகள் என்றால் அது ஷப்பாத்தி பரோட்டாவாக இருக்கும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.
இதை சாப்பிடுவதற்கு ஃசெப் தாமுவின் ஸ்டைலில் முட்டை சாப்ஸ் செய்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். இதை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- 6 முட்டை வேக வைத்தது
- 4 ஸ்பூன் எண்ணெய்
- 2 வெங்காயம்
- 2 தக்காளி
- 1 ஸ்பூன் மிளகு
- 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
- 1 ஸ்பூன் சீரகம்
- கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
- 1 கருவேப்பிலை
செய்யும் முறை
ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம், தக்காளி, மிளகு, இஞ்சி- பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளரவும். இதை நன்றாக அரைத்துகொள்ளவும்.
தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் மீண்டும் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சீரகம், கருவேப்பிலை அரைத்த விழுது சேர்த்து, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கிளரவும்.
தொடர்ந்து முட்டை சேர்த்து வதக்கவும். இப்படி செய்த எடுத்து பரிமாறினால் முட்டை சாப்ஸ் தயார். இது உடலுக்கு ஆரோக்கியமான உணவாகவும் காணப்படுகின்றது. குழந்தைகளுக்கு சத்து நிறைந்தாகவும் காணப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |