இனி பலாக்கொட்டையை தூக்கியெறியாதீங்க... சூப்பரான பக்கோடா செய்து சாப்பிடலாம்
பொதுவாகவே அனைவருக்கும் பலாப்பலம் மிகவும் பிடிக்கும். இது முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் இந்த பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்களும் நிறைந்து காணப்படுகின்றது.
பலா பழத்தை சாப்பிடும் பொரும்பாலானவர்கள் பலாக்கொட்டையின் மகத்துவம் தெரியாமல் இதனை குப்பையில் போட்டுவிடுவார்கள்.
அதனை வைத்து மாலையில் தேனீருடன் சாப்பிடுவதற்கு சுவையானதும் ஆரோக்கியம் நிறைந்ததுமாக மொறு மொறு பக்கோடா எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பலாக்கொட்டை - 300 கிராம்
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கியது)
சோம்பு தூள் - 1 தே.கரண்டி
உப்பு - டீதவையான அளவு
கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
பச்சரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் பலாக்கொட்டையின் மேல் தோலை நீக்கிவிட்டு சுத்தத் செய்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதை குக்கரில் போட்டு பலாக்கொட்டைகள் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து குக்கரை மூடி 4-5 விசில் வரும் வரை நன்றாக வேக வைக்க வேண்டும்.
வெப்பம் தனிந்தவுடன் குக்கரைத் திறந்து, நீரை வடிகட்டிவிட்டு, பலாக்கொட்டைகளை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு ஒருமுறை கொரகொரவென்று அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு அதில் பூண்டு பற்களை தட்டி சேர்த்து , பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, சோம்பு தூள் என்பவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் கடலை மாவு, பச்சரிசி மாவு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீரை தெளித்து பக்கோடா பதத்திற்கு நன்றாக பிசைந்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து,பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை விருப்பமான அமைப்பில் தயார் செய்து அதில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறு மொறு பலாக்கொட்டை பக்கோடா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |