Viral Video: ஆம்லெட்டில் சாக்லேட்: ஆம்லேட்டுக்கு நீதி கேட்டு அலறும் நெட்டிசன்கள்
பொதுவாக நாங்கள் நிறைய வகையான ஆம்லெட்டுகளை கேள்விப்பட்டிருப்போம், சுவைத்திருப்போம்.
ஆனால் மக்கள் ஆம்லெட்டுக்கு நீதி கேட்கும் வகையில் ஒருவர் ஆம்லெட் ஒன்றை தயார்ப்படுத்திய விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வைரலாகி வருகின்றது.
சாம்லெட் ஆம்லெட்
பாதையோரத்தில் கடையொன்றை நடத்தி வருபவர் புதுவிதமான ஆம்லெட் ஒன்றை செய்து வருகிறார். இதனைப் பார்த்த மக்கள் இதை அருவருக்கும் வகையில் கமெண்டி செய்து வருகின்றனர்.
அதில் அந்த சமையல்காரர் ஆம்லெட் தயாரிப்பதற்காக ஒரு பாத்திரத்தில் சில முட்டைகளை உடைத்துப்போடுவது போல வீடியோ ஆரம்பிக்கிறது.
பிறகு அதில் சிறிது மசாலா, வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய பனீர் மற்றும் சில கொத்தமல்லி இலைகளை தூவுகிறார். அடுத்து, ஆம்லெட்டில் சாக்லேட்டைத் துருவி அதன் மேல் சாக்லேட் சிரப்பைப் போட அவர் ஒரு grater ஐப் பயன்படுத்துகிறார்.
பிறகு ஆம்லெட்டைப் புரட்டி நான்கு ரொட்டி மற்றும் சீஸ் துண்டுகளைச் சேர்க்கிறார். இறுதியில், அவர் ஆம்லெட்டைத் தட்டி மேலும் சில சாக்லேட் சிரப்பால் அலங்கரித்து தக்காளி சாஸ் பரிமாறுகிறார்.
இதனைப்பார்த்த இணைய வாசிகள் அருவருக்கும் முகபாவனைகளைக் கொடுத்து ஆம்லெட்டுக்கு நீதி வேண்டும் எனவும் இது சட்டவிரோதமானது எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும், இந்த வீடியோவானது தற்போது படும் வைரலாகி வருகின்றது.