குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் வெஜிடபிள் சீஸ் ஆம்லெட்
பொதுவாக ஆம்லெட் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
முட்டையில் அதிகமான புரோட்டின் சத்துக்கள் இருப்பதால் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி முட்டை கொடுப்பார்கள்.
இந்த முட்டையை சிலர் தினமும் அவித்து தான் கொடுப்பார்கள். தினமும் முட்டை அவித்து எடுத்து கொள்ளுவதால் சிலர் அதனை விரும்ப மாட்டார்கள்.
அந்த வகையில் உடல் எடையை குறைக்கும் வகையில் எவ்வாறு முட்டையை வித்தியாசமாக வெஜிடபிள் சீஸ் ஆம்லெட் செய்வது எப்படி என்பதனை தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- முட்டை - 3
- குடைமிளகாய் - 1
- முட்டைகோஸ் - 100 கிராம்
- கரட்- 1
- பெரிய வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 3
- கொத்தமல்லித்தழை - சிறிதளவு
- சீஸ் - ஒரு சிறு கட்டி
- எண்ணெய் - தேவையான அளவு
- மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
- உப்பு - சுவைக்கேற்ப
தயாரிப்பு முறை
முதலில் ஆம்லெட்டிற்கு தேவையானளவு முட்டையை எடுத்து தனியாக உடைத்து ஒரு பவுலில் போட்டு கொள்ளவும்.
பின்னர் வெங்காயம், குடை மிளகாய், பச்சை மிளகாய்,முட்டைகோஸ், கரட், கொத்தமல்லி எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இந்த கலவையுடன் மஞ்சள்தூள், உப்புத்தூள் என்பன தேவையானளவு எடுத்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
இதனை தொடர்ந்து முட்டைக்கலவையுடன், காய்கறிகளை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதில் நெய் அல்லது எண்ணெய் விட்டு முட்டையை நமக்கு வேண்டிய வடிவத்தில் ஊற்றிக் கொள்ளவும்.
அதற்கு மேல் சீஸ் துருவலை போட்டு வெந்ததும் திருப்பி போட்டு இறக்கினால் அருமையான வெஜிடபிள் சீஸ் ஆம்லெட் தயார்.