சுவையான சீஸ் பாஸ்தா சாப்பிட்டதுண்டா?
Healthy Food Recipes
By Sinduja
ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான உணவுகளை உண்டு போரடித்துவிட்டதா?
குழந்தைகளுக்கும் சரி பெரியவர்களுக்கும் சரி விதவிதமான உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவ்வாறு விதவிதமான உணவுகளில் சீஸ் பாஸ்தா எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாஸ்தா - 250 கிராம்
- தக்காளி - 4 (நறுக்கியது)
- வெ.பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
- வரமிளகாய் - 3
- உலர்ந்த கற்பூரவள்ளி - 1 டீஸ்பூன்
- கொத்தமல்லி - 4 மேசைக்கரண்டி
- பால் - 1/2 கப்
- சீனி - 2 தேக்கரண்டி
- சீஸ் - 1/2 கப் (துருவியது)
- ஒலிவ் ஒயில் - 1 மேசைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
- நீர் கொதித்ததும் அதில் சிறிதளவு உப்பு மற்றும் பாஸ்தாவைப் போட்டு வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
- பின்னர் தக்காளியையும் வரமிளகாயையும் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெ.பூண்டு, கற்பூரவள்ளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின்னர் அரைத்த தக்காளியை ஊற்றி, உப்பு மற்றும் சீனி சேர்த்து நன்கு கிளறிவிட்டு பச்சை வாசனை போகும்வரை நன்கு வேகவிட வேண்டும்.
- பின்னர் அதில் பால் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
- பின்பு அதில் துருவிய சீஸ், கொத்தமல்லியைச் சேர்த்து கிளறி இறக்கவும்.
- சுவையான சீஸ் பாஸ்தா ரெடி.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US