வாழைப்பழம் சாப்பிடும் முன்பு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்
வாழைப்பழம் தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்களில் பல ஆண்டு காலமாக தொடர்ந்து வரும் ஒன்று.
வாழை மரத்தில் வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பூ, பழம் என அனைத்தையும் மருத்துவம், உணவு இரண்டிலும் பயன்படுத்தப்படுகின்றது.
தற்போது மார்க்கெட்டில் பல வகையான வாழைப்பழங்கள் கிடைக்கின்றன. ஆனால் வாழைப்பழம் சாப்பிடும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
வாழைப்பழம் சாப்பிடும் முன்பு கவனிக்க வேண்டியவை
வாழைப்பழத்தில் அமினோ அமிலங்கள், வைட்டமின் பி 6, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் இருக்கின்றது.
மழைக்காலத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானது தானாம். மேலும் உடம்பிற்கும் நல்லதாம். ஆனால் அது சாப்பிடும் நேரம், சாப்பிடும் விதத்தை பொறுத்து விளைவுகள் காணப்படும்.
வாழையை தினமும் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி, மூளை செயல்பாடு மற்றும் இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்கின்றது.
அஜீரணம், இருமல் அல்லது ஆஸ்துமாவால் பாதிக்கப்படுபவர்கள் வாழைப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாதாம்.
வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை சாப்பிடுவது அதிக அமிலத்தன்மையை ஏற்படுத்துமாம்.
இதில் இருக்கும் பொட்டாசியம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துமாம்.
வாழைப்பழத்தை காலை உணவின் போது எடுத்துக்கொள்ளவும். அல்லது சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
வாழைப்பழங்களை பால் அல்லது பால் சார்ந்த உணவுகளுடன் உட்கொள்வது நச்சுத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |