ஏமாற்றிய காதலர் கனவில் வந்தால் என்ன நடக்கும்?
பொதுவாக நமக்கும் வரும் கனவுகள் என்பது, ஒருவர் தூங்கும்போது அவரது மனதில் எழும் மனப் படிமங்கள், காட்சிகள், உணர்வுகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பாகும்.
இப்படி வரும் கனவுகள் ஏன் வருகிறது என அறிவியல் விளக்கம் ஒன்று இதுவரையில் கண்டறியப்படவில்லை. ஆனால் மூளையில் நினைவுகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்வதன் விளைவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கனவுகள் நல்லது, கெட்டது என இரண்டு வகையாக வகைப்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் ஒருவரின் தற்போதைய மனநிலை மற்றும் எண்ணங்களை தான் கனவுகள் பிரதிபலிக்கிறது.
கனவுகள் உளவியல் ரீதியாக ஆராயப்படுகின்றன, மேலும் கனவுகளின் அர்த்தம் குறித்து பல கோட்பாடுகள் உள்ளன. அதிலும் குறிப்பாக சிக்மண்ட் பிராய்ட் போன்ற உளவியல் அறிஞர்களால் கனவுகள் ஆராயப்பட்டுள்ளன.
சில கலாச்சாரங்களில், கனவுகள் எதிர்கால நிகழ்வுகளை குறிப்பதாக நம்பப்படுகிறது. அதே போன்று கனவுகள் வருவது ஒரு வகையான சகுன எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
அப்படியாயின், உங்களுடைய கனவில் உங்களை ஏமாற்றிச் சென்ற காதலர் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பதிவில் பார்க்கலாம்.
ஏமாற்றிய காதலர் வந்தால் என்ன பலன்?
ஏமாற்றிய காதலி/ காதலன் கனவில் வந்தால், அது உங்கள் மனதில் உள்ள பழைய உறவின் தாக்கமாகவோ அல்லது அந்த உறவில் ஏற்பட்ட காயங்களின் பிரதிபலிப்பாகவோ இருக்கும் அறிவியல் கூறுகிறது.
இப்படியான நினைவுகள் தற்போதைய உறவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த பழைய நினைவுகளை கடந்து வர முயற்சிக்க வேண்டும். உங்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
கனவுகள் பெரும்பாலும் உங்கள் ஆழ்மனதில் உள்ள எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருப்பதால் உங்களுடைய காதலர் கனவில் வந்தால் அவர்களால் ஏற்ப்பட்ட பாதிப்புக்கள் இன்றும் உங்கள் மனதில் இருக்கிறது என அர்த்தமாகும்.
இது பழைய உறவின் நினைவுகளை மீண்டும் கொண்டு வரலாம். அதிலும் குறிப்பாக உங்களுடைய உறவு உங்களை காயப்படுத்தியிருந்தால். அத்தகைய கனவுகள் உங்களை ஏமாற்றியது பற்றிய உணர்ச்சிகளை மீண்டும் கொண்டு வந்து, மனதில் சில தாக்கங்களை ஏற்படுத்தும்.
ஒரே கனவு அடிக்கடி உங்களை தொடர்ந்து பாதித்தால், ஒரு உளவியல் நிபுணரின் உதவியை நாடுவது சிறந்தது. இந்த உணர்வுகளை எப்படி கையாளலாம் என அவர்கள் உங்களை வழி நடத்துவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |