பார்லர் செல்லாமல் முகத்தை பொலிவாக மாற்ற வேண்டுமா?
பார்லர் செல்லாமல் முகத்தை ஜொலிக்க வைக்க என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முக அழகை அதிகரிக்க
இன்றைய காலத்தில் முகத்தினை பளபளபாக்க பலவிதமான கிரீம்களை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே முகத்தின் அழகை அதிகரிக்கலாம்.
ஆம் சப்பாத்தி, பூரி இவற்றிற்கு பயன்படுத்தும் கோதுமை மாவு, முகம், கழுத்து, கைகளை பொலிவூட்டவும் செய்யும்.
ஒரு சின்ன பாத்திரத்தில் 3 ஸ்பூன் கோதுமை மாவு, 1 ஸ்பூன் பசும்பால், அரை ஸ்பூன் தேன், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் மாதிரி கலக்கவும்.
முதலில் பசும்பாலால் முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும். பிறகு, கண் பகுதிகளை தவிர்த்து, முகம் மற்றும் கழுத்தில் கீழிருந்து மேலே அப்ளை செய்யவும்.
மெதுவாக மசாஜ் செய்யும் போது, இறந்த செல்கள் வெளியேறும், ரத்த ஓட்டமும் சிறந்ததாகும்.
பத்து நிமிடம் காயவிட்டு பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பின்பு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை தடவவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |