ChatGPT Go: 1 ரூபாய் கூட இல்ல.. 1 வருடம் இலவசமா? இந்தியர்களுக்கு ஜாக்போட்
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் சாட்ஜிபிடி யூசர்களுக்கு (OpenAI) நிறுவனம் புதிய சலுகையொன்றை கொடுக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
தற்போது அனைத்து நவீனமயமாக்கலிலும் AI தொழில்நுட்பம் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறது.
AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சினிமா கூட எடுக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது இந்தியாவில் உள்ள AI பயனர்களுக்கு ChatGPT Go புதிய சலுகையொன்றை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த சலுகை தொடர்ந்து 1 வருடக்காலத்திற்கு இருக்கும் என்றும், இதனால் பயனர்கள் பல வேலைகளை செய்து கொள்ளலாம் என்றும் OpenAI நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

1 வருடத்திற்கு இலவசம்
எதிர்வரும் நவம்பர் 4ஆம் தேதி துவக்கம் சாட்ஜிபிடி கோ திட்டம் ஒன்று பயனர்களின் கவனத்திற்கு வரவுள்ளது. புதிதாக சாட்ஜிபிடி கோ Sign-up செய்யும் பயனர்களுக்கும், பழைய பயனர்களுக்கும் லிமிடெட் பிரீயட் சலுகையாக இந்த திட்டம் அறிமுகமாகியுள்ளளது.
மாதத்துக்கு ரூ.399 விலை கொண்ட இந்த புதிய திட்டமானது ஒரு வருடத்திற்கு இலவசமாக கிடைக்கும். பயனர்களை அதிகப்படுத்தி கொள்வதற்காக OpenAi இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதனால் மாதத்துக்கு ரூ.399 செலவில் பயனர்கள் சலுகையை அனுபவிக்கலாம்.

அதே சமயம், ChatGPT Plus திட்டத்தின் விலை மாதத்துக்கு ரூ.1,999ஆகவும், ChatGPT Pro திட்டம் மாதத்திற்கு ரூ.19,900ஆகவும் இருக்கிறது. இதனால் அதிகமான பயனர்கள் மலிவு விலையில் கிடைக்கும் சாட்ஜிபிடி கோ திட்டத்தை ஒரு வருடத்திற்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.
வசதிகள்
1. ஒரு வருடத்திற்கே ரூ.4,788ஆக தான் செலவு இருக்கும்.
2. சாட்ஜிபிடி கோ-வின் புதிய திட்டத்தில் பிரீமியம் ஏஐ மாடலான ஜிபிடி-5 (GPT-5) வெர்ஷன் கொடுக்கப்படுகிறது. இமேஜ் ஜெனரேஷன் அணுகல் நீடிக்கப்பட்டுள்ளது.
3. ஃபைல் அப்லோட், அட்வான்ஸ்டு டேட்டா அனாலைசிஸ் மற்றும் பர்சனலைஸ்டு மெமரி ரெஸ்பான்ஸ் போன்ற அணுகல்கள் கிடைக்கும்.

4. சாட்ஜிபிடி கோ-வின் இந்த திட்டத்தினால் இந்தியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பாவனை அதிகமாகும்.
5. இதற்கு முன்னர் பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) சந்தா ஒட்டுமொத்த ஏர்டெல் பயனர்களுக்கு இலவசமாக கொடுக்கப்பட்டது. அதிலும் 1 வருடத்திற்கான சந்தா கிடைக்கும். இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.17,000ஆக இருக்கிறது.
6. கூகுள் நிறுவனமும் ஜெமினி ஏஐ மாடலில் பல்வேறு சலுகைகளுடன் வழங்கி கொண்டிருக்கிறது. தற்போது அதில் சாட்ஜிபிடியும் சேர்ந்து விட்டது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |