தினமும் 10 மணிக்குள் தூங்கினால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? முடிஞ்ச சோதித்து பாருங்க
தூக்கம் என்பது மனிதர்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தூக்கத்தின் சுழற்சியில் மாற்றம் ஏற்படும் போது உடலில் ஏகப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும்.
சீக்கிரம் படுக்கைக்குச் செல்வதனால் நீண்ட காலமாக மக்கள் வாழலாம் என பல பரிந்துரைகளை நாம் பார்த்திருப்போம்.
எவ்வளவு பிஸியான காலக்கட்டமாக இருந்தாலும் உரிய நேரத்திற்கு படுக்கைக்கு செல்லவும்.
தவறும் பட்சத்தில் இதய ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வும் பாதிக்கலாம்.
அந்த வகையில், உரிய நேரத்திற்கு தூங்காவிட்டால் என்னென்ன பாதிப்புக்கள் வரும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
உரிய நேரத்திற்கு தூங்குவது அவசியம்
தூக்கமின்மை தொடரும் பட்சத்தில் மனச்சோர்வு மற்றும் இதய நோய் போன்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படும்.
அதே சமயம், இரவில் சீக்கிரம் தூங்குபவர்களுக்கு நீண்ட ஆயுள் இருக்கும் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய ஹார்ட் ஜர்னலில் ஆய்வின்படி, இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் தூங்குபவர்களுக்கு இதயம் மற்றும் இரத்த ஓட்ட நோய் அபாயம் குறைவு என நிரூபிக்கப்பட்டுள்ளது.
1. ஒருவர் சீக்கிரம் தூங்கச் செல்லும் போது, தொந்தரவுகள் அல்லாத ஆழ்ந்த உறக்கத்தை அனுபவிக்கலாம். அத்துடன் அவர்களின் ஆரோக்கியமும் நல்லதாக இருக்கும். தொடர்ந்து 8-9 மணிநேர உறக்கத்தை பெறுவதற்கு இது வழிவகுக்கும்.
2. உரிய நேரத்திற்கு தூங்கும் பொழுது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கான பிற ஆபத்து காரணிகளின் அபாயம் குறைவாக இருக்கும்.
3. சர்க்கடியான் தாளம் மூளையில் உள்ள பினியல் சுரப்பி மற்றும் நமது சூழலில் உள்ள ஒளியின் அளவுகளால் கட்டுபடுத்தப்படும். இதனால் ஹார்மோன்களின் தாக்கம் சிறந்ததாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |