40 வயதை கடக்கும் பெண்களுக்கு இருக்கு மாற்றங்கள்.. கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக 40 வயதை தாண்டிய பெண்களுக்கு உடலளவில் சில மாற்றங்கள் ஏற்படும். இதன் காரணமாக தான் புதிய புதிய நோய்கள், அதிக எடை ஆகிய பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
40 வயதை கடக்கும் பெண்கள் தங்களின் அழகில் அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள்.
ஏனெனின் அவர்களின் ஹார்மோன்ஸ் மாற்றங்களினால் அழகு படிப்படியாக குறைக்க ஆரம்பிக்கும் காலக்கட்டமாக பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் 40 வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
40 வயதை கடப்பவர்களுக்கு..
1. எடை அதிகரிப்பை கட்டுபடுத்த வேண்டும் என்றால் உடற்பயிற்சி மற்றும் யோகா போன்ற பயிற்சிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இது இரத்தயோட்டத்தை அதிகரித்து இளமையாக இருக்க வழிவகுக்கும்.
2. கணவன் - மனைவி தொடர்பில் ஏதாவது விரிசல் ஏற்பட்டு விட்டால் இது போன்ற நேரங்களில் மன அழுத்தம் ஏற்படும். இதுவும் அவர்களின் உடல் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
3. உணவு பழக்கங்கள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அத்துடன் துரித உணவுகளை தடுப்பது நல்லது.
4.வைட்டமின் டி குறைபாடு, கால்சியம் குறைபாடு போன்று நிறைய மாற்றங்களால் உடலில் நிறைய நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது. ஆகையால் பழங்கள் மற்றும் தானியங்கள் அதிகமாக சாப்பிட வேண்டும்.
5. பச்சை காய்கறிகள், கீரைகள், பயறுவகைகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இது எடை அதிகரிக்க விடாமல் தடுக்கும்.
6. கண் பார்வையில் ஏதாவது மாற்றம் ஏற்படும். ஆகையால் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்த உணவுகள் அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |