வெயில் காலங்களில் ஃபுட் பாய்சன் ஆவது எதனால்? இந்த தவறை செய்யாதீங்க
வெயில் நேரங்களில் சில உணவுகள் உடம்பிற்கு தீங்கு ஏற்படுத்துவதோடு, வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்ற பிரச்சினையையும் ஏற்படுத்துகின்றது.
இந்த காலநிலையில் காரமான மற்றும் துரித உணவுகள் சாப்பிடுவதால் செரிமான பிரச்சினை ஏற்படுகின்றது. நாம் சாப்பிடும் உணவுகளில் பாக்டீரியா மற்றும் வைரஸ், நோய்க்கிருமிகள் உணவை சீக்கிரம் கெட்டுப்போகவும், இவை வயிற்றுக்கு ஃபட் பாய்சன் ஏற்படுகின்றது.
கோடை காலங்களில் உணவுகள் தாமதமாக செரிமானம் ஆவதால், பழைய உணவுகளை சாப்பிடும் போது, உடம்பில் நீரிழப்பு, வெப்ப பக்கவாதம் ஏற்படுகின்றது.
புட் பாய்சன் எதனால் ஏற்படுகின்றது?
சமைக்கும் காய்களை சுத்தமாக கழுவாமல் வைத்திருப்பது
சமைத்த உணவினை சரியாக பதப்படுத்தாமல் இருப்பது
சாப்பிட்ட தட்டை சுத்தமாக கழுவி வைக்காமல் இருப்பது
வெளியே சுகாதாரமில்லாத உணவை சாப்பிடுவது
உணவில் கவனம்
வெயில் காலத்தில் காரமான மற்றும் செரிமானத்திற்கு கடினமான உணவைத் தவிர்க்கவும்
பழைய உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்கவும்
உணவு தயாரிக்கும் போதும், உண்ணும் போதும் சுத்தமாக இருக்கவும்.
சாப்பிடும் கட்டாயம் கைகளை கழுவவும்.
சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்கவும்
அதிகமாக தண்ணீர் குடிக்கவும். மோர், இளநீர் பானங்களை அதிகமாக பருகவும்.