கொரோனாவை தொடர்ந்து புதிய நோய்: சீனாவில் மனிதனை தாக்கியது! பேரதிர்ச்சியில் உலக நாடுகள்
கொரோனாவை தொடர்ந்து பறவைக் காய்ச்சலின் புதிய வேரியண்டால் சீனாவில் முதன்முறையாக மனிதருக்கு தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூஹானில் பரவில் கொரோனா வைரஸ் இன்று வரை உலக நாடுகளை ஆட்டம் காண வைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது, சீனாவில் உருமாறிய பறவைக் காய்ச்சலால் முதல் முறையாக மனிதர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
பறவைக்காய்ச்சலின் H10N3 வேரியண்டால் சீனாவின் ஜியாங்ஸூ மாகாணத்தில் 41 வயதுடைய நபர் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.
பொதுவாக மனிதர்களுக்கு இதுவரை பரவாமல் இருந்த H10N3 வகை வேரியண்டால், உலகிலேயே முதல் முறையாக மனிதர் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது சற்று அதிர்ச்சியை தந்துள்ளது.
கடந்த 28ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபரின், உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், விரையில் பூரண குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அவருடன் நெருக்கமாக தொடர்பில் இருந்தவர்களை மருத்துவ குழு கண்காணித்து வருவதாகவும் தெரிகிறது.
பாதிக்கப்பட்ட நபருக்கு கோழி அல்லது வேறு ஏதேனும் விலங்கின பண்ணையில் இருந்து தொற்று பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது.