முதன்முறையாக விஜய் மனைவி சங்கீதா பற்றி பேசிய சந்திரசேகர்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் பற்றியும் விஜய் மனைவி பற்றியும் சில விடயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் சந்திரசேகர்.
விஜய் பற்றிய பேசிய சந்திரசேகர்
விஜய்க்கும் தனக்கும் ஏன் சண்டை என்பது குறித்து முழுமையாக விளக்கம் அளித்து இருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகர்.
விஜய் பற்றி பேச தொடங்கிய அவர் விஜய் வருடத்திற்கு ஒருமுறை மேடையில் ஏறி குட்டி கதை சொல்வதைப் பார்த்தால் தனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது, வாழ்க்கையில் மிக அடிபட்ட ஒருவரால் தான் அவ்வாறு பேச முடியும்.
விஜய் அதற்குள் இவ்வளவு அனுபவத்தை பெற்று விட்டாரா? என்று தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் விஜய்க்கு பொறுப்பு ஏறிக்கொண்டே போகிறது என்று விஜய் குறித்து பேசத் தொடங்கினார்.
ஆண் பிள்ளைகள் எப்போதும் அம்மா பிள்ளையாகவே இருப்பார்கள். ஆனால் விஜய் அப்படியில்லை அவர் என்னிடம் அதிகம் பேச மாட்டார். இருந்தாலும் என் மீது அவ்வளவு அன்பு வைத்திருப்பார். நான் அவரை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கவே மாட்டேன்.
அவர் சிறு வயதாக இருக்கும்பொழுது அரை டவுசர் போட்டுக் கொண்டு இருப்பார். அப்பொழுது ஹோம் ஒர்க் செய்யவில்லை என்றால் ஸ்கேலை எடுத்து நானே அவரை பலமாக அடித்து விடுவேன். பின்னர் நானே அந்த இடத்தில் தேங்காய் எண்ணெய் போட்டு அவரை சமாதானப்படுத்துவேன்.
அப்படித்தான் நான் அவரை பார்த்து பார்த்து வளர்த்தேன். இன்று கூட நான் அவரை அதே நிலையில் தான் வைத்துப் பார்க்கிறேன். அவர் இன்னும் எனக்கு குழந்தையாக தான் இருக்கிறார். இதுதான் என்னுடைய தவறு.
சினிமாவுக்குப் பிறகுதான் விஜய் அதற்குப் பிறகுதான் ஷோபா கோவிலில் அர்ச்சனைக் கூட அவனுக்குத்தான் முதலிடம். நான் எந்த இடத்திலும் அவனை விட்டுக்கொடுத்ததே இல்லை என தெரிவித்திருந்தார்.
சங்கீதா
என் மருமகள் சங்கீதா பிள்ளைகளை மிக கண்டிப்புடன் வளர்த்து வருகிறார். பிள்ளைகள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவர் கவனித்துக் கொள்கிறார்.
பள்ளிக்கு அழைத்துக் கொண்டு போவது, மீண்டும் பள்ளியில் இருந்து அழைத்து வருவது, ஹோம் ஒர்க் செய்ய வைப்பது என்று அவர் பிள்ளைகளின் ஒவ்வொரு வேலையும் பார்த்து பார்த்து கவனிக்கிறார்.
எங்கள் வீட்டிற்கு வரும்போது கூட நாங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுத்தால் பிள்ளைகள் அவர் தாயார் சொன்னால் தான் வாங்கிக் கொள்ளும்.
அந்த அளவிற்கு மிகவும் ஒழுக்கத்துடன் பிள்ளைகளை வளர்த்து வருகிறார் சங்கீதா என்று மருமகள் பற்றியும் பெருமையாக பேசினார் எஸ் ஏ சந்திரசேகர்.