அடுத்த வாரம் வரும் ஆபத்தான சந்திர கிரகணம் - இந்த 3 ராசிக்காரங்களுக்கு மட்டும் தொட்டதெல்லாம் துலங்கும்!
அடுத்த வாரம் வரும் ஆபத்தான சந்திர கிரகணம் சிலருக்கு அதிர்ஷ்டத்தையும் கொண்டு வர போகின்றது.
மே 16ம் தேதியன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணம் 3 ராசிக்காரர்கள் மீது கருணை காட்டும்.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இது முழு சந்திர கிரகணமாக இருக்கும், இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும்.
குரு பெயர்ச்சி பலன்.. அடுத்த ஆண்டு வரை இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட யோகம் தானாம்!
விருச்சிக ராசியில் சந்திர கிரகணம்
அடுத்த வாரம் மே 16 அன்று விருச்சிக ராசியில், இந்த ஆண்டின் சந்திர கிரகணம் நிகழப் போகிறது.
இந்தியாவில் தெரியாவிட்டாலும் இந்த கிரகணத்தின் காலம், காலை 7.02 மணி முதல் மதியம் 12.20 மணி வரை இருக்கும்.
இந்த சந்திர கிரகணத்தன்று, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அமைக்கும் கூட்டணி 3 ராசிக்காரர்களுக்கு ஆக்கப்பூர்வமான பலன்களைத் தருவதாக இருக்கும்.
நீரிழிவு நோயை ஓட ஓட விரட்ட இந்த ஒரு பொருள் போதும்...
எந்த ராசிக்காரர்களுக்கு சாதகம்
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு பல பாக்கியங்களையும் கொடுக்கும். குறிப்பாக தொழில் மற்றும் பணியிடங்களில் மதிப்பும் மரியாதையும் கூடும். முதலீடு செய்வதற்கும் இது நல்ல நேரமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் மிகவும் சிறப்பாக அமையும். வேலையில் நல்ல பலன்கள் கிடைக்கும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெறலாம். வருமானம் கூடும். பண வரவு சாதகமாக இருக்கும்.
சனியின் வக்ர பெயர்ச்சியால் கொட்டும் அதிர்ஷ்டம்! 75 நாட்களுக்கு ராஜயோகம் பெறும் 3 ராசிகள்
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் சாதகமான பலனைத் தரும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் தேடிவரும். ஆனால், அதை சரியாக பயன்படுத்தி பலனடைவதுதான் உங்கள் கையில் இருக்கிறது.