தோலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் ஆபத்தில் இருக்குதுன்னு அர்த்தம்
மனித உடலில் ஒவ்வொரு பாங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவை ஒவ்வொன்றும் தனது தொழிலை சீராக செய்தால் மட்டுமே ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.
அந்தவகையில் உடலில் 500 இற்கும் மேற்பட்ட தொழில்களை செய்யும் கல்லீரல் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பாக பார்க்கப்டுகின்றது.
இது நம் உடலை சீராக இயங்க வைக்கும் பல்வேறு அத்தியாவசிய செயல்பாடுகளை செய்கிறது. செரிமானத்திற்கு உதவுவது முதல் தீங்கு விளைவிக்கும் பொருட்களை நச்சு நீக்குவது வரையில் உடல் ஆரோக்கியத்தில் கல்லீரலின் பங்கு இன்றியமையாதது.
கல்லீரல் முதன்மையாக இரத்தத்தில் இருந்து நச்சுகளை வடிகட்டுகிறது, செரிமானத்திற்கு பித்த சாற்றை உற்பத்தி செய்கிறது, அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை சேமிக்கிறது மற்றும் ஊட்டச்சத்துக்களை வளர்சிதைமாற்றம் செய்கிறது.
அதன் தொழில்பாடு அதிகம் என்பதால், கல்லீரல் பல நோய்கள் மற்றும் கடுமையான சேதங்களுக்கு ஆளாகும் நிலை விரைவில் ஏற்படக்கூடும்.
தவறான உணவு பழக்கங்கள், ஒரே இடத்தில் மணிக்கணக்கில் அமந்தவாறான வாழ்க்கை முறை, அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் சில மரபணு நிலைமைகள் கொழுப்பு கல்லீரல் மற்றும் சிரோசிஸ் போன்வை கல்லீரல் நோயின் அபாயத்தை வெகுவாக அதிகரிக்கின்றது.
எனவே கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டுமாயின் கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகின்றது.இது தொடர்பான விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
கல்லீரல் பாதிப்பு
சரியான நேரத்தில் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதை அறிவதன் மூலம் விரைவில் மருத்துவ உதவியை பெற்று உயிரை காப்பாற்றிக்கொள்ள முடிவதுடன், ஹெபடைடிஸ், சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற கடுமையான கல்லீரல் நோய்களின் அபாயத்தை வலுவாக குறைக்க முடியும்.
பொதுவாக சோர்வு, வயிற்று வீக்கம், சிறுநீரில் ஏற்படும் மாற்றங்கள், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை கல்லீரல் பாதிப்பின் சில முக்கிய அறிகுறிகளாக குறிப்பிடப்படுகின்றது. கல்லீரல் பாதிப்பின் சில நுட்பமான அறிகுறிகள் பெரும்பாலும் நமது தோலில் வெளிப்படும் என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுபிடுகின்றனர்.
முக்கிய அறிகுறிகள்
1. சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல் : இரத்த ஓட்டத்தில் பிலிரூபின் அளவானது வெகுவாக அதிகரிப்பதன் விளைவாக தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறும். இது கல்லீரல் பிரச்சனைகளின் ஆரம்ப அறிகுறிகளில் மிக முக்கியமானதாகும். இதனை அலட்சியப்படுத்துவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தபக்கூடும்.
2. ஸ்பைடர் ஆஞ்சியோமாஸ் : ஸ்பைடர் ஆஞ்சியோமாஸ் எனப்படுவது ஒரு வகை telangiectasis ஆகும், இது சிறிய இரத்த நாளங்கள் விரிவடைந்து தோலின் மேற்பரப்பிற்கு அருகில் தெரியும் நிலையைக் குறிக்கிறது. "சிலந்தி" என்ற சொல், காயத்தின் சிலந்தி போன்ற தோற்றத்தில் இருந்து உருவானது. ஒரு மைய சிவப்பு புள்ளியுடன் மெல்லிய இரத்த நாளங்கள் வெளிப்புறமாக வெளிப்படுகின்ற நிலையாகும். இது கல்லீரல் பாதிப்பின் முக்கிய அறிகுறியாக அடையாளப்படுத்தப்படுகின்றது.
3. பால்மர் எரித்மா: பால்மர் எரித்மா எனப்படுவது உள்ளங்கைகளின் சிவத்தல் மற்றும் வீக்கம் ஏற்படுவதை குறிக்கின்றது. இது அதிகரித்த இரத்த ஓட்டம் மற்றும் அதிகரித்த ஈஸ்ட்ரோஜன் அளவுகள் காரணமாகவே ஏற்படுகின்றது. இது கல்லீரல் செயலிழப்பின் முக்கிய அறிகுறியென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
4. அரிப்பு : காரணமின்றி தோலில் ஏற்படும் அரிப்பு கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக இது இரவில் அடிக்கடி மோசமடைகிறது, இது பெரும்பாலும் கல்லீரல் பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக அறியப்படுகின்றது. தோலில் பித்த உப்புகள் படிவதன் காரணமாக இந்த நிலை ஏற்படுகின்றது. இந்த அறிகுறிகள் இருப்பதான உணர்ந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |