இந்த பழக்கங்கள் இருக்கா? அப்போ இளமையிலேயே வயதானவர்கள் போல் இருப்பார்களாம்... விளக்கும் சாணக்கிய நீதி!
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் சாணக்கியர்.
இவர்களின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏறாளம் பேர் இருக்கின்றனர். வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு வழிக்காட்டியாக இருந்துள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை.
சாணக்கிய நீதியின் அடிப்படையில் குறிப்பிட்ட சில பழக்கங்கள் நம்மை இளமையிலேயே வயதானவர்கள் போல் மாற்றிவிடுகின்றது.
முதுமைக்கு காரணம் ஒருவர் எப்போதும் வாழ்க்கைப் பயணத்தில் இருக்கிறார் என்பதாகும். அப்படி விரைவில் முதுமையை ஏற்படுத்தும் பழக்கங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முதுமையை விரைவுப்படுத்தும் பழக்கங்கள்
பொதுவாக இயற்கைக்கு எதிராக உடலை இயக்கினால் விரைவில் வயதான தோற்றம் ஏற்பட்டு விடுகின்றது.உதாரணத்துக்கு அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது அல்லது பசி எடுக்கும் நேரத்தில் உணவை தவிர்ப்பது, ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது. போன்ற விடயங்கள் விரைவில் முதுமையை ஏற்படுத்தும்.
தினசரி நீண்ட தூரம் பயணம் செய்வதால் ஏற்படும் பயணக் களைப்பு மற்றும் ஒழுங்கற்ற செயல்பாடுகள் ஆகியவற்றுடன் கணவனால் உடல் சுகம் கிடைக்காத பெண்களுக்கும் விரைவில் முதுமை ஏற்பட்டுவிடுகின்றது.
அதற்கு உதாரணமாக சாணக்கியர் குதிரையை குறிப்பிடுகின்றார். மனிதர்களைத் தவிர, கட்டி வளர்க்கப்படும் குதிரைகளும் விரைவில் முதுமையடைந்துவிடுவதாக சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
குதிரையின் இயற்கை நிலை ஓடுவது. அந்த ஓட்டம் தான் அதை இளமையாக வைத்திருப்பதற்கு மிகவும் முக்கியம். அதன் இயற்கை நிலையை தடுத்தால் விரைவில் முதிர்ச்சி ஏற்படும்.
அதிகம் தூங்குவதும் மனிதர்களை விரைவில் முதுமையடைய செய்யும். காலை முதல் மாலை வரை தூங்குபவர்களுக்கு லட்சுமி தேவியின் ஆசி ஒருபோதும் கிடைக்காது. சூரியன் உதிக்கும் வரை தூங்கும் பழக்கத்தை கொண்டவர்கள் எப்போதும் வறுமையை அனுபவிப்பார்கள்.
மேலும் இவர்களுக்கு பல்வேறு உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு காணப்படுகின்றது.
தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதும் முதுமையை விரைவாக்குகின்றது. மேலும் இந்த பழக்கம் ஒருவரை ஏழைகளாக மாறுகின்றது.
அத்தகையவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் ஆரோக்கியமாக இருக்க முடியாத நிலை ஏற்படுவதுடன் சீக்கிரமாகவே வயதான தோற்றத்தை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |