துணையுடன் சண்டை போட்ட பிறகு இந்த விடயங்களை தவறியும் சொல்லாதீங்க... ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே கணவன் மனைவிக்கு இடையில் சண்டைகள் வருவது மிகவும் இயல்பான விடயம் தான்.ஆனால் இதில் யாராவது ஒருவர் நிச்சயம் விட்டுக்கொடுத்தால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு திருமண உறவில் துணையுடன் ஏற்படும் சண்டைகளை மேலும் நீடிக்க விடாமல் தடுப்பதற்கு மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
முடிந்துபோன சண்டைகளைப் பற்றி பேச கூடாது
கணவன் மனைவிக்கு இடையே சண்டைகள் ஏற்பவது சாதாரணமான விடயம் தான்.மேலும் அது காலப்போக்கில் தானாக சரியாகிவிடும்.
ஆனால், ஏற்கனவே நடந்த சண்டையை மீண்டும் மீண்டும் நினைவில் வைத்துக் கொண்டு அடுத்த சண்டையின் போதும் பழைய விடயங்களை தவறியும் பேசாதீங்க இது சண்டையை மேலும் சிக்கலான நிலைமைக்கு கொண்டுப்போய்விடும்.
பாசாங்கு செய்ய கூடாது
துணையுடன் சண்டையை தீர்க்க வேண்டும் என்று விரும்பினால் அதை அதை மனதால் உண்மையாக முயற்ச்சிக்க வேண்டும்.
போலியாக சண்டையை சரிசெய்வதற்காக பேசினால் பெரும்பாலும் போலி உணர்ச்சிகள் பெருகி பிற்காலத்தில் பெரிய பிரச்சனையாக தொடங்கும். எனவே தவறியும் பசாங்கு செய்யும் வண்ணம் பேசாதீர்கள்.
சண்டையைத் தீர்க்க அவசரப்பட கூடாது
துணையுடன் சண்டை ஏற்பட்டால் பெரும்பாலும் அதிக கோபத்தில் ஒரு பக்க நியாயத்தை மட்டும் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அது சண்டையை தீர்க்க அவசரப்படுவதாகும்.
இதில் ஒரு பிரையோசணமும் இருக்கப்போவது கிடையாது. ஒரு பிரச்சனை என்று வந்தால் அதில் விவாதம் நடந்தால் உங்கள் துணை பேச இருக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். சிந்திக்காமல் வார்த்தைகளை கொட்டிவிட கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |