Chanakya Niti: சாணக்கிய நீதியின் படி யாரை நம்பக்கூடாதுனு தெரியுமா?
சாணக்கிய நீதியின் படி யாரை நம்பக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சாணக்கிய நீதி
சாணக்கியர் கி.மு 300ம் காலக்கட்டத்தில் வாழ்ந்த ஆசிரியர், எழுத்தாளர், பொருளாதார நிபுணர், சட்ட நிபுணர், தத்துவவாதி மற்றும் அரசியல்வாதி என பல பரிமானங்களைக் கொண்டவர் கூறிய சில பொன்மொழிகள் தான் சாணக்கியரின் நீதி என்று அழைக்கப்படுகின்றது.
இந்த நீதியில் ஒரு மனிதனின் வாழ்க்கை முறையில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் குறித்து தத்துவங்கள் விரிவாக கூறப்பட்டுள்ளது. இதன்படி எந்தமாதிரியான குணங்கள் கொண்ட நபர்களை நம்பக்கூடாது என்பதை சாணக்கியர் நீதியில் கூறப்பட்டுள்ளதை தற்போது தெரிந்து கொள்வோம்.

யாரை நம்பக்கூடாது?
நமது வாழ்க்கையில் பலரும் வந்து செல்லும் நிலையில், சிலர் தான் செய்கிறேன் என நமக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதனை செயல்படுத்தாமல் மறந்துவிடுபவர்கள் நம்பகமானவர்கள் கிடையாது.
நமது மீது ஒருவர் விமர்சனம் செய்பவர்கள், நமது தன்னம்பிக்கையை இழக்கப்பண்ணுகின்றனர். ஆதலால் நமது தன்னம்பிக்கையை சேதப்படுத்தும் நபர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.
நமது சந்தோஷமான நேரத்தில் மட்டும் தன்னுடன் இருந்துவிட்டு, கெட்ட நேரத்தில் காணாமல் செல்வதுடன், ஆதாயத்திற்காக நம்முடன் இருப்பவர்கள் உண்மையான நண்பர்கள் கிடையாது என்பதை தெரிந்து கொண்டும் அவர்களிடம் விலகி இருக்க வேண்டும்.

உங்களது முன்பு மற்றவர்களைக் குறித்து பேசினால், ஒரு நாள் உங்களைக் குறித்தும் மற்றவர்களிடம் பேசுவார்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களிடமிருந்து விலகி இருக்கவும்.
பொதுவாக இனிமையான பேச்சை பலரும் விரும்புவார்கள். அவ்வாறு அதிகமாக நம்மை புகழும் நபரிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவ்வாறு முகஸ்துதி செய்பவர்கள் சுயநலவாதியாக இருப்பார்கள்.
ஒருவரை நம்புவதற்கு முன்பு கவனமாக சிந்தித்து, அவரது உண்மையான முகத்தினை தெரிந்து கொண்டு பழகவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |