சாணக்கிய நீதி: இந்த 6 குணங்கள் உங்களிடம் இருக்கா? அப்போ அனைவராலும் மதிக்கப்படுவீர்கள்
ஆச்சார்யா சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த வழிகாட்டியாக திகந்தவர். இவரின் கொள்கைகள் இன்றும் போதிக்கப்படக்கூடியதாகவே இருக்கின்றது.
இவர் பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர்.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும்.
இன்றும் உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளம். சாணக்கிய நீதியின் அடிப்படையில் ஒரு மனிதன் சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும் என்றால் அவனிடம் இருக்க வேண்டிய அடிப்படை கொள்கைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நன்கொடையாளர்கள்
சாணக்கியரின் கருத்துப்படி மற்றவர்களுக்கு கொடுக்கும் மனம் இருந்தால் எப்போதும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். தர்மம் செய்வதால் ஒருவரின் கெட்ட கர்ம வினைகள் அகலும்.
தர்மம் செய்யும் குணம் கொண்டவர்கள் உயர்ந்த மனிதர்களாக போற்றப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு சமூகத்தில் தானாக மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
வேத ஞானம்
சாணக்கியரின் கூற்றுப்படி, வேதங்களை அறிந்த ஒருவர் வித்தியாசமான கொள்கைகளை பின்பற்றுவார்.
ஞானம் பெற்றவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் தவறு செய்ய மாட்டார்கள். மேலும் வாழ்வின் மதிப்பை மற்றவர்களுக்கு புரிய வைக்கும் தன்மையில் இருப்பதால் இவர்கள் அனைவராலும் மதிக்கப்படுவார்கள்.
கடின உழைப்பு
சாணக்கியரின் கூற்றுப்படி கடின உழைப்பால் வெற்றியடையும் அனைவரும் சமூகத்தில் மிகுந்த மரியாதைக்கு உரியவர்கள். கடின உழைப்பால் சாதிக்க முடியாத விடயம் உலகில் எதுவும் இருக்க முடியாது.
நேர்மை
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும். அது அவருக்கு சமூகத்தில் மதிப்பையும் மரியாதையையும் பெற்றுக்கொடுக்கின்றது. இப்படிப்பட்டவர்களை பார்த்து கடவுளும் கூட மகிழ்ச்சியடைகின்றார்.எப்போதும் நேர்வழியில் செல்வது எவ்வளவு கடினமானதோ அந்த அளவுக்கு மரியாதைக்குரியது.
பொறுமை
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபரின் மிக நல்ல குணங்களில் பொறுமைக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. கடினமான சூழ்நிலையிலும் பொறுமை காக்கும் குணம் வாழ்வில் வெற்றியடைய வழிவகுக்கும். இப்படிப்பட்ட குணத்தை கொண்டவர்கள் அனைவராலும் மதிக்கப்படுவார்கள்.
பொறுப்பு
சாணக்கியரின் கருத்துப்படி பொறுப்புக்களை புறக்கணிக்காத மனிதன் போற்றப்பட வேண்டியவன். தன்னை பெரிதாக நினைக்காமல் தன் குடும்பத்துக்காக கஷ்டப்படுபவர்கள் எப்போதும் சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |