சாணக்கிய நீதி: இலட்சியத்தை எளிதாக அடைய வேண்டுமா? இந்த விடயங்களை பின்பற்றினாலே போதும்
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
இன்றும் உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளமாக இருக்கின்றனர். சாணக்கிய நீதியின் அடிப்படையில் மாணவர்கள் மற்றும் தொழில் புரிவோர் எத்தனை தடைகள் வந்தாலும் தங்களின் இலக்கை நோக்கி பயணிக்கவும் வெற்றின் சுவையை அனுபவிக்கவும் பின்பற்ற வேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
வேலைகளையும் நேரத்திற்கு முடிக்க வேண்டும்
சாணக்கிய நீதியின் அடிப்படையில் இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள். தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு வேலையிலும் முழு கவனம் செலுத்துவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு வேலையை எந்தளவுக்கு ஈடுபாடோடு செய்கின்றோம் என்பதிலேயே நமது வெற்றி தங்கியிருக்கின்றது.
ஒழுக்கம்
சாணக்கியரின் கூற்றுப்படி வாழ்க்கையில் ஒழுக்கம் மிகவும் இன்றியமையாதது.இந்த விடயம் எல்லாவற்றுக்கும் பொருந்தும். நாம் எந்த செயலில் ஈடுப்பட்டாலும் அதற்குரிய ஒழுக்க நெறிகளை பின்ப்பற்ற வேண்டியது முக்கியமானது. சிறந்த ஒழுக்கமுடையவர்கள் வாழ்வில் தங்களின் இலக்குகளை எளிமையாக அடைய முடியும்.
மோசமான நண்பர்களைத் தவிர்க்க வேண்டும்
சாணக்கிய நீதியின் அடிப்படையில் நாம் எந்த வகையான மனிதர்களுடன் நட்பு கொள்கின்றோமோ அதற்கு ஏற்றாற் போல் தான் நமது வாழ்க்கையின் வளர்ச்சியும் அமையும். எனவே தவறான நண்பர்களை தவிர்க்க கற்றுக்கொள்ள வேண்டும். இலக்கில் கவனம் செலுத்துவதற்கு இது மிகவும் முக்கியமாகது. மோசமான நட்பை தவிர்க்க தெரிந்தவர்கள் வாழ்வில் எளிமையாக இலக்கை அடைய முடியும்.
போதைக்கு அடிமையாகக்கூடாது
சாணக்கியரின் கூற்றுப்படி தீய பழக்கங்கள் மற்றும் தெளிவற்ற மனநிலை என்பன இலக்கில் குறிவைக்க முடியாமல் மனதை குழப்பக்கூடியதாக இருக்கின்றது. எனவே போதைக்கு அடிமையாகாமல் தற்காத்துக்கொள்ள தெரிந்தவர்கள் வாழ்வில் எளிமையாக தங்களின் லட்சியத்தை அடைகின்றார்கள்.
சோம்பேறித்தனம் கூடாது
சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சோம்பேறித்தனம் வாழ்வில் கிடைக்க கூடிய அனைத்து வெற்றிகளையும் தடுக்கும் வலிமை கொண்டது. வெற்றிக்கு மிகப்பெரும் எதிரி தான் சோம்பேறித்தனம். அதனை விட்டு யார் தங்களின் இலக்கை அடைய கடினமாக உழைக்க தயாராக இருக்கின்றார்களோ, அவர்கள் வாழ்வில் நிச்சயம் இலக்கை அடைய முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |