சொந்த கையில் சூனியம் வைக்கும் 5 பழக்கங்கள்- நிம்மதியே இருக்காது.. உங்களுக்கு இருக்கா?
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கிய கூற்றின் படி, குறிப்பிட்ட சில பழக்கங்கள் அவர்களின் வாழ்க்கையையே இல்லாமலாக்கும்.
அப்படியான பழக்கங்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
நிம்மதியை கெடுக்கும் பழக்கங்கள்
1. ஆச்சார்ய சாணக்கியர் கூற்றின்படி ஒருவர் தேவைக்கு அதிகமாக செலவு செய்யக் கூடாது. அதிகமான செலவு செய்தால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. சிந்திக்காமல் பணத்தைச் செலவழிக்கும் பழக்கம் உள்ளவர்கள் பணத் தட்டுப்பாட்டு போது பல இன்னல்களுக்கு முகங் கொடுக்க வேண்டியிருக்கும்.
2. ஒருவருடைய பலவீனத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. சிலர் பதட்டம் அல்லது கவலையில் இருக்கும் போது நண்பர்கள் அல்லது பக்கத்தில் இருப்பவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். சில சமயங்களில் உங்களின் பலவீனத்தை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் உங்களின் எதிர்காலம் நரகமாக இருக்கும் என சாணக்கியர் கூறுகிறார்.
3. ஒருவர் தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது எப்போதும் மகிழ்ச்சி தராது. மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்தால் திருப்தி கிடைக்காது. அளவிற்கு அதிகமாக ஆசைப்பட்டு தங்களின் வாழ்க்கையை அழித்துக் கொள்கிறார்கள்.
4. சோம்பேறித்தனம் வெற்றிக்கு மிகப்பெரிய எதிரியாக இருக்கிறது. சோம்பேறித்தனம் உள்ளவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் முன்னேற மாட்டார்கள். அன்றைய நாளுக்கு உள்ள வேலை அடுத்த நாளுக்கு ஒத்தி வைக்கும் பொழுது வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களை எதிர்க் கொள்ள வேண்டியிருக்கும்.
5. பேராசை என்பது மனிதர்களை மிருகமாக மாற்றும் மோசமான குணமாக பார்க்கப்படுகின்றது. ஒருவரின் மனதிற்குள் பேராசை என்ற எண்ணம் வந்துவிட்டால் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அனைவரும் எதிரியாக தெரிவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |