Chanakya: மறந்து கூட உங்க கூட சேராதீங்க.. எச்சரிக்கும் சாணக்கியர்.
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், வாழ்வில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் குறிப்பிட்ட சிலரை நம்பினால் நமது வாழ்க்கையையே மாறி விடும். சாணக்கிய நீதியின்படி, எந்தெந்த குணங்களைக் கொண்டவர்கள் தனியாக இருந்து சாதிப்பார்கள் என்பதை பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியரின் தத்துவங்கள்
1. ஆச்சார்ய சாணக்கியர் கூற்றின்படி, ஒருவர் பருவ வயதிற்கு வந்த பின்னர் அவருடைய வேலைகளை அவரே செய்ய பழக வேண்டும். அப்படி செய்வதால் வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளை அவரே சரிச் செய்து கொள்வார்.

2. என்ன தான் உங்களுக்கு சொத்து அதிகமாக இருந்தாலும், அவருக்கு கல்வி என்பது அவசியம். படிக்கும் சமயத்தில்கவனம் சிதறல் இருந்தால், அதுவே காலப்போக்கில் உங்களுக்கு வேறு விதமான பிரச்சினையை ஏற்படுத்தலாம்.
3. ஒருவர் தியானம், உடற்பயிற்சி போன்ற விடயங்களில் கூடுதல் கவனம் எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனின் இது தான் உங்களின் மன நிம்மதியை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.

4. சாணக்கியரின் கூற்றுப்படி, பணம் தொடர்பான வேலைகளுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்காமல், உங்களின் அறிவை வளர்க்கும் விடயங்களுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
5. சாப்பாட்டிற்கு மரியாதை கொடுத்து சாப்பிட வேண்டும். தனியாக இருக்கும் சமயத்தில் சிலர் சாப்பாட்டிற்கு அவ்வளவு கவனம் கொடுக்கமாட்டார்கள். அப்படி இருக்காமல் முடிந்தளவு சாப்பாட்டிற்கான மரியாதையை தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |