சாணக்கிய நீதி : உங்க வாழ்க்கையில் இந்த விஷயங்கள் இருக்கா? அப்போ நீங்க கடவுளுக்கு பிரியமானவர்
தனது அறிவாற்றல் மற்றும் தெளிந்த சிந்தனையபல் உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் சாணக்கியர்.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும்.
இன்றும் உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளம். சாணக்கிய நீதியின் அடிப்படையில் ஒருவர் கடவுளுக்கு பிரியமாகவராக இருக்கும் பட்சத்தில் அவர் வாழ்வில் முக்கியமாக பெற்றிருக்கும் விடயங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நல்ல வாழ்க்கைத்துணையைப் பெற்றவர்கள்
சாணக்கிய நீதியின் அடிப்படையில் முன்ஜென்ம கரும வினைகளுக்கு அமையவே ஒருவர் வாழ்க்கை துணையை பெறுகின்றார்.
அந்த வகையில் சிறந்த புரிந்துணர்வு மற்றும் துணையை மதித்து நடக்ககூடிய வாழ்க்கை துணையை பெற்றவர்கள் இறைவனின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற்றவராகவே கருதப்படுகின்றார்.
நிறைவான செல்வம்
பொதுவாக பணம் இல்லாமல் உலகில் எந்த விடயத்தையும் செய்ய முடியாது. சிலரிடம் பணம் தேவைக்கு அதிகமாக இருக்கும். சிலரிடம் பணம் தேவைக்கு ஏற்றாற் போல் இருக்கும்.ஆனால் பெரும்பாலானவர்களிடம் தேவைக்கு குறைவாகவே பணம் இருக்கின்றது.
இருப்பினும் பணத்தை நிர்வகிக்கும் திறமை ஒருவருக்கு இருந்தால் அவர் இறைவனின் ஆசீர்வாதத்தை பெற்றவர் என்கின்றது சாணக்கிய நீதி.
தாராள மனப்பான்மை
நிறைந்த மனதுடன் மற்றவர்களுக்கு கொடுக்கும் மனப்பான்மை மிகவும் குறைவான மனிதர்களிடமே காணப்படுகின்றது.
இவ்வாறு மற்றவர்களின் வாழ்க்கையை அழகாக்கும் நோக்கத்தில் தர்மம் செய்யும் குணம் கொண்டவர்கள் இறைவனுக்கு மிகவும் பிரியமானவர்கள் என சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு வேலை உணவு உண்பவர்கள்
உலகில் பலரும் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்பதற்கு கூட மிகவும் சிரமப்படுகின்றார்கள். இந்நிலையில் ஒரு நாளைக்கு இரண்டு வேளை நிறைவாக சாப்பிடும் வாய்ப்பு கிடைத்துள்ளவர்கள் இறைவனின் ஆசீர்வாதத்தை பெற்றவர்கள் என்கின்றார் சாணக்கியர்.
தொழில் திறமை
சாணக்கிய நீதியின் அடிப்படையில் ஒருவர் தொழில் ரீதியில் சிறப்பான திறமையை பெற்றிருந்தால் அவர் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக கருதப்படுகின்றார். ஆனால் இது குறித்து தற்பெருமை இல்லாத நபராக இருந்தால் அவர் கடவுளின் விருப்பத்துக்குரியவர் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |