இந்த நபர்களை அவமதிப்பவர்கள் வாழ்வில் முன்னேறவே முடியாது... எச்சரிக்கும் சாணக்கியர்!
சாணக்கிய நீதிக்கு தொன்று தொட்டு இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இந்த நீதி நூலில் மனித வாழ்க்கையில் நாம் நிச்சயம் கடக்க வேண்டிய கட்டங்கள் தொடர்பில் முழுமையான மற்றும் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றியும் ஆழ்ந்த அறிவையும் ஞானத்தையும் கொண்டிருந்தமையால் இவரின் கருத்துக்களுக்ள் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்றது.
சாணக்கிய நீதியின் பிரகாரம் நாம் வாழ்வில் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்றால், நல்ல கரும வினைகளை செய்ய வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் நாம் செய்யும் சில விடயங்கள் வாழ்க்கை முழுவதும் நம்மை துன்பத்தில் தள்ளும் அளவுக்கு ஆற்றல் கொண்டது என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
வாழ்வில் முக்கியமான சிலருக்கு கொடுக்கும் அவமரியாதை வாழ்வில் நமது சகல முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியையும் முற்றாக அழித்துவிடும். அப்படி அவமதிக்கவே கூடாத நபர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
வாழ்வில் அவமதிக்கவே கூடாத நபர்கள்
சாணக்கியரின் கருத்துப்படி தாயை நிந்திப்பவர்கள் வாழ்வில் ஒருபோதும் முன்னேற்றம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.
பொதுவாக ஒவ்வொரு குழந்தைக்கும் பேச கற்றுக்கொடுப்பதே தாய் தான். அப்படிப்பட்டவரை வார்தைகளால் நோகடிப்பது மிகப்பெரும் பாவம். இதனால் வாழ்வில் பெரிய துன்பங்களை சந்திக்க நேரிடும்.
தாய் சொல்வதையும், சொல்லாமலே சொல்ல நினைப்பதையும் அறிந்து கொண்டு தாயை மரியாதையுமன் நடத்துகின்றவர்கள் வாழ்கை வெற்றிகளும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்.
சாணக்கிய நீதியின் பிரகாரம் தாய் போலவே நமக்காக தங்களின் வாழ்வில் பல விடயங்களை விட்டுக்கொடுத்து தியாகத்தின் மறு உருவமாக இருப்பவர் தான் தந்தை.
ஒருபோதும் தந்தையிடம் தவறாக பேசவோ அல்லது அவமதிக்கவோக் கூடாது. இந்த பாவத்தை செய்பவர்கள் வாழ்வில் எவ்வளவு போராடினாலும் முன்னேறவே முடியாது என சதாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
அது போல் தவறியும் வாழ்வில் நமக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியரியரை அவமதித்துவிட கூடாது. ஆசிரியர் பதவி தாய் தந்தையின் நிலைக்கு ஒப்பானது.
எனவே, அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதோ அல்லது செயலில் ஈடுப்படுவதோ பெரும் சாபத்தை ஏற்படுத்தும். குருவை நிந்திப்பவர்கள் வாழ்க்கையில் மிக மோசமான சவால்களை சந்திக்க வேண்டி ஏற்படும் என சாணக்கிய நீதியில் குறிப்பிடப்படுகின்றது.
சாணக்கியரிக் கூற்றுப்படி எப்போதும் வயதில் மூத்தவர்களுக்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் கொடுக்க வேண்டும். வயதில் மூத்தவர்கள் மனதை காயப்படுத்துபவர்களுக்கு தீராத சாபம் உண்டாகும்.
அதனால் வாழ்வில் எவ்வளவு போராடினாலும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் ஒருபோதும் அடையவே முடியாது என சாணக்கியர் எச்சரித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |