இந்த 5 விஷயங்களை செய்தால் Life- ல வெற்றி குவிஞ்சுகிட்டே இருக்குமாம்- செய்து பாருங்க
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கியரின் கூற்றுப்படி, வாழ்க்கையில் நாம் செய்யும் சிறு தவறுகள் கூட வெற்றியிலிருந்து உங்களை ரொம்ப தூரம் தள்ளி வைக்கும் எனக் கூறப்படுகிறது.
அந்த வகையில் வெற்றியிலிருந்து எம்மை திசைத்திருப்பும் தவறுகள் தொடர்பாக தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியரின் தத்துவங்கள்
1. சாணக்கிய நீதியின் படி, ஒருவரின் எண்ணங்களில் உறவுமுறை அதிகமாக தாக்கம் செலுத்துகின்றது. விளக்கு எரியும் போது வெளிச்சம் தந்தாலும் கருப்பு நிற புகையை வெளியில் விடுவதை போல, ஒருவர் என்ன தான் வெற்றிப்பாதையில் சென்றாலும் அவரின் எண்ணங்கள் அதில் அதிகமாக தாக்கம் செலுத்துகின்றது. எண்ணங்களை சரிப்படுத்து ஆற்றல் உணவிற்கு இருக்கிறது என சாணக்கியர் கூறுகிறார்.
2. பணம் மனித வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கிறது. இப்படியான சந்தர்ப்பங்கள் வரும் போது பணத்தை சரியாக பயன்படுத்துவது அவசியம். பணத்தின் மதிப்பையும் தேவையை சரியாக புரிந்து கொண்டவர் மட்டுமே வாழ்க்கையில் சாதிக்க முடியும்.
3. ஆச்சார்யாரின் கொள்கையின் படி, கருணை மற்றும் கட்டுப்பாடான மனம் போல வலிமையான தவம் வேறு எதுவும் இல்லை. மனிதர்களுக்கு வரும் பேராசை ஒரு மோசமான நோய். இந்த நோய் வந்தால் வாழ்க்கையில் அவ்வளவு எளிதில் வெற்றிப் பெற முடியாது.
4. மனிதர்களாக பிறந்தவர்கள் எவ்வளவு அழகாக தோற்றமளித்தாலும், அறிவு இல்லாவிட்டால் அவர்களால் எந்த பயனும் இல்லை. இந்த அறிவை சரியாக பயன்படுத்தியவர்கள் இன்று செல்வந்தர்களாக நடமாடுகிறார்கள்.
5. எவ்வளவு கஷ்டமான சூழ்நிலை வந்தாலும் தன்னம்பிக்கை மட்டுமே அவர்களை அத்தகைய சூழ்நிலையிலிருந்து காத்து கொள்கிறது. எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் தன்னம்பிக்கை இருந்தால் அவர்களை யாராலும் வெல்ல முடியாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |