இந்த பழக்கம் கொண்டவர்களை தவறியும் வீட்டில் சேர்க்காதீங்க... எச்சரிக்கும் சாணக்கியர்
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராகவும் திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களை பற்றியும் ஆழ்ந்த அறிவையும் ஞானத்தைக் கொண்டிருந்தமையால் இவரின் கருத்துக்கள் பிற்காலத்தில் உலகப்புகழ் பெற்றது.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பாக சாணக்கிய நீதி நூல் அறியப்படுகின்றது.
சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் குறிப்பிட்ட சில பழக்கங்களை கொண்டவர்களை தவறியும் வீட்டில் சேர்க்க கூடாது என சாணக்கியர் எச்சரித்துள்ளார். அது எப்படிப்பட்ட பழக்கங்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த நபர்களை வீட்டில் சேர்க்க கூடாது
சாணக்கிய நீதியின் பிரகாரம் தங்களின் தந்திரமான குணத்தை மறைத்து எப்போதும் நல்லவர்களாக பாசாங்கு செய்து தீமை செய்துவிட்டு போகும் குணம் கொண்டவர்களை தவறியும் வீட்டிற்கு அழைக்கவே கூடாது.
இவர்கள் உங்களை பெரிய பிரச்சினையில் சிக்கவைத்துவிடுவார்கள் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
சாணக்ககியர் கருத்துப்படி கொள்ளை, திருட்டு போன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுப்படுவதன் மூலம் பணம் சம்பாதிக்கும் நபர்களை ஒருபோதும் வீட்டில் சேர்க்க கூடாது என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
இந்த குணம் கொண்டவர்கள் உங்கள் பணத்தையும் அபகரிக்க கூடும் அல்லது உங்களின் நன்மதிப்புக்கு கலங்கம் விளைவிப்பார்கள் எனவே இவர்களிடமிருந்து எப்போதும் விலகியிருப்பதே சிறந்தது.
சாணக்கியரின் ஆலோசனையின் அடிப்படையில் பிறர் பணத்தை அபகரிக்கும் குணம் கொண்டவர்களிடமிருந்தும் மற்றவர்களை துன்புறுத்தி மகிழ்சியடைபவர்களிடமிருந்தும் எப்போதும் விலகியிருக்க வேண்டும்.
இவர்களை கண்டால் வணக்கம் சொல்வதையோ, வீட்டுக்கு அழைப்பதையோ எந்த சூழ்நிலையிலும் செய்துவிடக்கூடாது. இது உங்களை பாரிய பிரச்சினையில் தள்ளிவிடும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
சாணக்கியர் கருத்துப்படி ஒருபோதும் நாத்திகர்களுடன் பழக்கம் வைத்துக்கொள்ளவே கூடாது. அவர்கள் உங்களின் நல்ல சிந்தனைகளை கெடுக்கும் வகையில் பேசி உங்களின் நம்பிக்கையை உடைத்துவிடுவார்கள். இவர்களுடன் பழக்கம் வைத்துக்கொள்வது மிகவும் ஆபத்தானது என்கின்றார் சாணக்கியர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |