மறந்தும் இப்படியான தவறுகளை இனி செய்யாதீங்க.. நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும்- ஜாக்கிரதை
மனிதனாக பிறந்த நாம் அனைவரும் பகல் முழுவதும் ஓயாமல் உழைத்து இரவில் நிம்மதியாக தூங்கினால் தான் அவன் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
ஒருவர் 7-8 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது உடலுக்கும் மனதிற்கு ஓய்வை கொடுக்கிறது.
காலையில் எழுந்து ஒரு வேலையை புத்துணர்வுடன் செய்ய வேண்டும் என்றால் இரவு கட்டாயம் நிம்மதியாக தூங்க வேண்டும்.
நம்மிள் பலர் பணி சுமை, தூக்கமின்மை போன்ற பல காரணங்களால் இரவு ஆழ்ந்த தூக்கமில்லாமல் தவிக்கிறார்கள். ஆகவே இரவு நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் என்னென்ன விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதனை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
வாஸ்து குறிப்புகள்
1. பூஜை அறையை போன்று நாம் தூங்கும் படுக்கையறையையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். சில சமயங்களில் அசுத்தமாக இருப்பதால் எதிர்மறையான ஆற்றல்கள் உங்கள் அறையில் நிறைந்திருக்கலாம். படுக்கையறை சுத்தமாக இல்லாவிட்டால் தொற்று நோய், பண இழப்பு ஏற்படும் மற்றும் இரவு உங்களால் நிம்மதியாக இருக்க முடியாத நிலை ஏற்படும்.
2. உங்கள் வீட்டில் படுக்கையறையின் கதவு வடக்கு அல்லது கிழக்கு பகுதி ஒட்டி வைக்கலாம் ஆனால் நடுப்பகுதியில் மட்டும் வைக்க வேண்டாம். அப்போ தான் இரவு வேளையில் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
3. வாஸ்துபடி நீங்கள் தூங்கும் பெட்ரூமில் மான், மாடு, புலி, சிங்கம் போன்றவற்றின் படங்கள் இருக்கவே கூடாது. அதற்கு பதிலாக அன்பை தூண்டும் ஓவியங்கள், மன நிம்மதி தரும் படங்கள், புத்தகங்கள் இருக்கலாம். இதுவும் உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை பெற்று தருகின்றது.
4. வாஸ்துபடி, உங்கள் படுக்கையறைக்கு நீளம், பிங்க், மஞ்சள் போன்ற நிறத்தில் நிறப்பூச்சி பூசலாம். அத்துடன் படுக்கையறையின் கூரைக்குவெள்ளை நிறம் கொடுக்கலாம். அதை தொடர்ந்து இரவு வேளைகளில் விளக்கு சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் தான் இருக்க வேண்டும். இவை சரியாக இருந்தால் உங்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
5. தூங்கும் போது தவறான திசையில் தலை வைத்து தூங்கினால் தூக்கம் வராமல் அவஸ்தைப்படலாம். உடல்நல பிரச்சனை இருப்பவர்கள் தெற்கு திசை, கிழக்கு திசை, மேற்கு திசை ஆகிய திசைகளில் தூங்குவது நிம்மதியை தரும் எனக் கூறப்படுகின்றது. இது போன்ற தவறுகள் தொடர்ந்து செய்து வந்தால் நிம்மதியான தூக்கம் கிடைப்பது குறைவாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |