குதிரை போல் வலிமை தரும் ஒற்றைப் பழம்- இலைகளும் ஆரோக்கியம் தருமாம்.. முழு பலனை தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக பழங்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகின்றன.
பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் கிடைக்கின்றன.
அந்த வரிசையில் எமக்கு ஏற்படும் சாதாரண நோய்கள் முதல் தீவிரமாகும் நோய்கள் வரை அனைத்தையும் கட்டுக்குள் வைக்கும் வேலையை அத்திப்பழம் செய்கின்றது.
அதன் பழங்கள் மட்டும் இல்லாமல் இலைகளிலும் மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உள்ள நன்மைகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்
1. அத்திப்பழம் ஒரு மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும். இதில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் 6 ஆகிய சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. அத்துடன் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு போன்ற பல வகையான தாதுக்களும் நிறைந்துள்ளன. இதனால் எந்தவித தயக்கமும் இல்லாமல் நாம் அத்திப்பழத்தை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
2. அத்திப்பழங்களை உட்கொள்வதால் செரிமான அமைப்பு வலுவாக்கப்படுகின்றது. அத்துடன் செரிமான கோளாறுகளால் நீண்ட நாள் அவஸ்தை அனுபவிப்பவர்களும் அத்திப்பழத்தை மருந்தாக எடுத்து கொள்ளலாம். மலச்சிக்கல் மற்றும் பிற வயிற்று பிரச்சனைகள் இருப்பவர்கள் அத்திப்பழம் சாப்பிடுவதால் நிவாரணம் தருகின்றது எனக் கூறப்படுகின்றது.
3. அத்திப்பழம் எலும்புகளை வலுப்படுத்தும் எனக்கூறப்படுகின்றது. ஏனெனின் இந்த பழத்தில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளதால் எலும்புகளுக்கு ஆரோக்கியம் கொடுத்து எலும்பு அடர்த்தியை அதிகரிக்கச் செய்கிறது.
4. அத்திப்பழத்தின் பழங்கள் ரத்த சர்க்கரை அளவை குறைத்து டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படுகின்றது.
5. டயட்டில் இருப்பவர் அத்திப்பழத்தை டயட் உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட அத்திப்பழம் சாப்பிடும் ஒருவருக்கு பசி ஏற்படுவது குறைவாக இருக்கும். டயட்டில் திட்டத்தின் படி சாப்பாடு எடுத்து கொள்பவர்கள் ஒரு நாளைக்கு 2 முதல் 3 அத்திப்பழங்கள் சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |