சாணக்கிய நீதி: ஒருவரின் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
சாணக்கிய நீதிப்படி ஒருவர் மனதில் என்ன நினைக்கிறாரோ அதை நாம் எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதை சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளது.

சாணக்கிய நீதி
ஒருவரின் மனதில் என்ன நடக்கிறது என்பதை அறிவது மிகவும் கடினம். பெரும்பாலும், மக்கள் நமக்கு முன்னால் நல்லவர்களாக நடிக்கிறார்கள், ஆனால் நம் முதுகுக்குப் பின்னால் நமக்குத் துரோகம் செய்கிறார்கள். எல்லோரும் அப்படி இல்லை என்றாலும் பெரும்பாலானோர் அப்படி தான் இருக்கிறார்கள்.
இந்தச் சூழலில், ஒருவரின் மனதில் என்ன அவர்கள் நினைக்கிறார்கள் என்பதை எளிதாகக் கண்டுபிடிக்க உதவும் சில தந்திரங்களை ஆச்சார்ய சாணக்கியர் அவருடைய நீதியில் விவரித்துள்ளார்.
ஆச்சார்ய சாணக்கியரின் இந்த இரகசியக் குறிப்புகளைப் பற்றி அறிந்துகொள்வோம்.

கண்டுபிடிக்கும் வழிகள்
தேவையற்ற பாராட்டு
- காரணமின்றி உங்களைப் புகழ்பவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். ஏனெனில், அத்தகையவர்கள் தங்கள் சொந்த நோக்கங்களுக்காகப் பொய்யான புகழை கொடுப்பார்கள். அத்தகையவர்கள் பெரும்பாலும் ஒருவித பேராசையைக் கொண்டிருப்பார்கள்.
துன்ப காலங்களில் உண்மை
- சாணக்கிய நீதியின்படி, உங்கள் நல்வாழ்வைப் பற்றி அதிகம் பேசும் ஒருவருக்கு உண்மையிலேயே உங்கள் நலனில் அக்கறை உள்ளதா என்பதை அறிய விரும்பினால், துன்ப காலங்களில் அவர்களைச் சோதித்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்கு துயர் என்று வரும் போது எந்த உதவியும் செய்யாமல் உங்களை கைவிட்டால் அவர்கள் உண்மையில் நல்லவர்கள் கிடையாது.

மற்றவர்கள் முன்னிலையில் கேலி செய்வது
- மற்றவர்களுடன் கேலியாகப் பேசும்போது அவர்களுடன் சேர்ந்து உங்களை இழிவுபடுத்தும் ஒருவரை விட்டு எப்போதும் விலகி இருங்கள். இவர்கள் எதிர்காலத்தில் உங்களுக்குத் துரோகம் செய்யக்கூடும்.அத்தகையவர்களை நீங்கள் ஒருபோதும் நம்பக்கூடாது. உங்கள் எண்ணங்களையும் அவர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
கண்களும் வார்த்தைகளும்
- ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவரின் கண்கள் அவரது மனதின் கண்ணாடி எனப்படுகின்றது. ஒரு மனிதனின் வாய் பொய் சொன்னாலும் அவருடைய கண் ஒருபோதும் பொய் சொல்லாது.உங்கள் மீது வஞ்சகம், துரோகம் அல்லது மறைமுக நோக்கங்களைக் கொண்ட ஒருவர் இனிமையாகப் பேசுவார், ஆனால் உண்மை அவரது கண்களில் தெரியாது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).