சாணக்கியர் அறிவுரை - கையில் சுத்தமாக பணம் இல்லையெனின் இதை செய்ங்க
சாணக்கியர் கூறுகிறார் கையில் கொஞ்சம் சகூட பணம் இல்லை என்றாலும் குறிப்பிட்ட விடயங்களை செய்தால மட்டும் போதும் என கூறுகிறார்.
சாணக்கியர் கூற்று
ஆச்சார்ய சாணக்கியர் தனது காலத்தில் மிகவும் அறிவாற்றல் மிக்கவராகவும், கற்றறிந்தவராகவும் அறியப்படுகிறார். தனது வாழ்நாளில், மனிதகுலத்தின் நலனுக்காக பல வகையான கொள்கைகளை இயற்றினார்.
இந்தக் கொள்கைகள் பின்னர் சாணக்கிய நீதி என்று அழைக்கப்பட்டன. வளமான வாழ்க்கையைத் தேடும் ஒருவர், சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் சாணக்கியர் கையில் பணமில்லாமல் கஷ்டப்பட்டாலும் குறிப்பிட்ட சில விடயங்களை செய்ய மறக்க கூடாது என கூறுகிறார்.
சாணக்கியர் கூற்று
சாணக்கியர் கூறுகிறார், "பணம் இல்லாதது ஒரு தடை, ஆனால் புத்தி இல்லாதது ஒரு பேரழிவு." என்னதான் நிதி நெருக்கடி இருந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் விட கூடாது அது ஒரு நாளில் உயர்த்தும்.
சாணக்கிய நீதியின்படி, கல்வியை எந்த செல்வத்தாலும் அழிக்க முடியாது. கையில் படிப்பதற்கு பணம் இல்லாமல் இருந்தாலும் படிப்பை ஒருபோதும் விட கூடாது. கல்வி உங்களை உயர்த்தும்.

பணம் இல்லாதபோது, புத்திசாலிகள், உழைப்பாளிகள் மற்றும் நேர்மறை சிந்தனை கொண்டவர்களை நீங்கள் உங்களுடன் நண்பர்களாக வைத்துக்கொள்வது அவசியம்.
"நெருக்கடிகளே வாய்ப்புகள்." அத்தகைய நேரங்களில், உங்கள் திறமைகளை அடையாளம் கண்டு, அதில் கவனம் செலுத்துங்கள் இது உங்களுக்கான செல்வத்தை உயர்த்தும்.
சாணக்கியர், "தன்னை நம்பும் ஒருவரை எந்த நெருக்கடியும் தடுத்து நிறுத்த முடியாது." பணம் இல்லாவிட்டாலும், உங்களை நீங்கள் மதித்து நம்பிக்கையுடன் நடத்த வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |