இந்த பொருளை உங்க உணவில் சேர்த்துக்கிட்டா... உங்க உடல் எடை சீக்கிரமா குறையுமாம்...!
வறுத்த கொண்டைக்கடலை ஆரோக்கியமான சிற்றுண்டியாகும். இது உங்கள் எடை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், செரிமான அமைப்பையும் மேம்படுத்துகிறது.
அதிகளவு புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளடக்கம் இதை ஒரு சிறந்த சிற்றுண்டி பொருளாக மாற்றுகிறது. இது எளிதாக எடுத்துச் செல்லக்கூடியது மற்றும் எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம்.
எடை இழப்புக்கு கொண்டைக்கடலை எவ்வாறு உதவுகிறது என்பதை தெரிந்துகொள்ள இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.
எடை குறைப்புக்கு உதவுகிறது
இது குறைந்த கலோரி சிற்றுண்டியாகும். கொண்டைக்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியை கட்டுப்படுத்துவதோடு, உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கும்.
மேலும், நீண்ட நேரத்திற்கு பசி உணர்வை தணிப்பதால், இது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே எடையைக் குறைக்க நினைப்போர் இதனை தங்களின் உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.
புரதம் அதிகமாக உள்ளது
நிபுணர்களின் கூற்றுப்படி, வறுத்த சானாவில் புரதம் அதிகம் நிறைந்துள்ளது, இது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருப்பதால், மறைமுகமாக இது எடையைக் குறைக்க உதவுகிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. மேலும், நார்ச்சத்து இதில் அதிகம் நிறைந்துள்ளதால், இது செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.
இரத்த சோகை
இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த உணவுப் பொருள் கொண்டைக்கடலை எனலாம். ஏனெனில் இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை அன்றாடம் சாப்பிட்டு வந்தால், இரத்த சோகையில் இருந்து விரைவில் விடுபடலாம்.