கொழுப்பை மின்னல் வேகத்தில் குறைக்கும் கொண்டைக்கடலை தோசை
கொண்டக்கடலை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
எடையை மின்னல் வேகத்தில் குறைக்கவும் கொண்டக்கடலை பயன்படுகின்றன.
இத்தகைய சிறப்பு மிக்க கொண்டக்கடலையை வைத்து தோசை சுடுவது எப்படி என்று பார்க்கலாம்.
தோழியை திருமணம் செய்ய ஆணாக மாறிய பெண்! இறுதியில் நேர்ந்த துயரம்
தேவையான பொருட்கள்
- கொண்டைக்கடலை - 1 கப்
- காய்ந்தமிளகாய் - 5
- பூண்டு - 2 பல்
- சீரகம் - சிறிதளவு
- எண்ணெய் - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
கொண்டைக்கடலையை 5 மணி நேரம் ஊறவைத்து பூண்டு, காய்ந்தமிளகாயுடன் கிரைண்டரில் தோசை மாவு பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
மாவை புளிக்க வைக்கத் தேவையில்லை.
செட்டிநாடு ஸ்டைலில் காரசாரமான பெப்பர் சிக்கன்
கடாயை அடுப்பில் வைத்து அரை டீஸ்பூன் சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்து மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி தோசையாக வார்த்து எண்ணெய் விட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
சூப்பரான சத்தான கொண்டைக்கடலை தோசை ரெடி.