எண் கணிதம் கூறும் ரகசியம்: 35 வயதிற்குப் பிறகு இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ராஜவாழ்க்கை!
which Birth Numbers Will Achieve Success After 35 : பொதுவாகவே ஒருவருடைய பிறப்பு எண்ணுக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக எண்கணித சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில், பிறந்த திகதியின் அடிப்படையில் ஒருவருடைய ஆளுமை, திறமைகள், பலவீனங்கள் மற்றும் எதிர்கால வாழ்க்கை தொடர்பான பல விடயங்களை அறிந்துகொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது.

இதன்படி, சில குறிப்பிட்ட திகதிகளில் பிறந்தவர்களுக்கு 35 வயதிற்குப் பின்னரே அதிர்ஷ்டம் கைகொடுக்கத் தொடங்குமாம்.இதன் மூலம் தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றம், வருமானத்தில் உயர்வு, பொருளாதார நிலைமையில் மாற்றம் என வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களிலும் நல்ல பலன்களைப் பெறுவார்கள் என நம்பப்படுகிறது.
அந்தவகையில், 35 வயதிற்குப் பின்னர் வாழ்க்கையில் அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் பெறுவார்கள் என எண் கணிதம் குறிப்பிடும் பிறந்த திகதிகள் எவை என்பதையும் 35 வயதை எட்டியதும் எவ்வாறான மாற்றங்களை இவர்கள் அனுபவிப்பார்கள் எனவும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
எண் 3

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் எண் 3. இதன் அதிபதி குரு பகவான். ஞானம், அறிவு, செழிப்பு, அதிர்ஷ்டம் ஆகியவற்றின் அடையாளமான குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆக்கப்பூர்வமானவர்களாகவும், தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
தங்களின் திறமைகளை வெளிப்படுத்த ஆர்வம் கொண்ட இவர்கள், ஆரம்பத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறப் போராட வேண்டியிருக்கும்.ஆனால் அனுபவம் அதிகரிக்கும்போது திறமைக்கேற்ற வாய்ப்புகளும், தொழிலில் முன்னேற்றமும் கிடைக்கும்.
எண் 4

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் எண் 4. இதன் அதிபதி ராகு. இவர்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட சிந்தனையும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் கொண்டிருப்பார்கள்.
எதையும் ஆழமாக ஆராய்வதுடன், புதுமையான யோசனைகளையும் கொண்டிருப்பார்கள். இருப்பினும், ஆரம்பகால வாழ்க்கையில் மனக்குழப்பங்களையும் பல சவால்களையும் சந்திக்க நேரிடும்.
குறிப்பாக, 35 வயதிற்குப் பிறகு வாழ்க்கையில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு, சரியான முடிவுகளை எடுப்பதன் மூலம் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் உயரத்தை அடைவார்கள்.
எண் 9

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் எண் 9. இதன் அதிபதி செவ்வாய். தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் அடையாளமான செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் துணிச்சலும் லட்சியமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயங்கமாட்டார்கள். இருப்பினும், ஆரம்பகாலத்தில் தங்களை நிரூபிக்கப் பல சிரமங்களைச் சந்திப்பார்கள். கோபம் மற்றும் அவசர முடிவுகள் சில நேரங்களில் முன்னேற்றத்திற்குத் தடையாக அமையலாம்.
ஆனால் 35 வயதிற்குப் பிறகு அனுபவத்தின் மூலம் தெளிவான முடிவுகளை எடுத்து, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.
எண் 8

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் எண் 8. இதன் அதிபதி சனி பகவான். இவர்களின் முக்கிய குணங்கள் கடின உழைப்பு, ஒழுக்கம், பொறுமை ஆகியவையாகும்.
வாழ்க்கையில் எதையும் எளிதில் அடைய முடியாத நிலையில், ஒவ்வொரு வெற்றிக்காகவும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும், எத்தகைய கடினமான சூழலிலும் மனவலிமையுடன் செயல்படுவார்கள்.
ஆரம்பகாலத்தில் பல தடைகளைச் சந்தித்தாலும், 35 வயதிற்குப் பிறகு உழைப்புக்கான பலனைப் பெறத் தொடங்குவார்கள். தொழிலில் வளர்ச்சி அடைவதுடன், சமூகத்திலும் தனக்கென ஒரு மதிப்புமிக்க இடத்தை உருவாக்கிக் கொள்வார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |