பிரபல நடன இயக்குநர் தூக்கிட்டு தற்கொலை! மரணத்திற்கான காரணத்தை படம் போட்டு காட்டிய சைதன்யா
தெலுங்கு பிரபல நடன கலைஞர் சைதன்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் முன்னர் வெளியிட்ட காணொளி திரையுலகிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடன கலைஞருக்கு இப்படியொரு நிலையா?
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 'தீ' என்ற நடன நிகழ்ச்சியில் பணியாற்றி வருபவர் தான் சைதன்யா. இவர் சமிபக்காலமாக கடும் பண நெருக்கடியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இவர் மன உறைச்சல் தாங்க முடியாமல் பல தடவைகள் பலரிடம் புலம்பியுள்ளார்.

இப்படியொரு நிலையில் நெல்லை கிளப் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரின் தற்கொலைக்கு முன்னர் இவர் சார்பானவர்களுக்கு ஒரு வீடியோவை பேசி வெளியிட்டுள்ளார்.

தற்கொலைக்கு முன்னர் வெளியான காட்சி
காணொளியில், “தனது பெற்றோர், சகோதரி, சக நடன மாஸ்டர்கள் மற்றும் நடனக் கலைஞர்களை மன்னித்து கொள்ளுங்கள். பணப்பிரச்சினையை என்னால் சாமாளிக்க முடியவில்லை.” என உருக்கமாக பேசியுள்ளார்.
Rip ????
— Adarsh (@NTRFanTrend) April 30, 2023
Dhee Fame Chaitanya Master ??pic.twitter.com/vYwyLd7zFW https://t.co/7oeYHuq7wh
மேலும் இவர் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சியில் இவருக்கு சரியான வருமானம் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை பொலிஸார் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.
இதனை பார்த்த இணையவாசிகள்,“ வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகளுக்கு சாவு தான் முடிவு என்றால் வாழ்க்கையில் யாரும் சாதிக்க முடியாது” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.