கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை: கதறும் 10 மாத குழந்தை! தப்பியோடிய கணவர்
தமிழகத்தில் 10 மாத குழந்தையை தவிக்கவிட்டு கர்ப்பிணி தாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் ஓகளூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் சென்னையில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி லலிதா (24). இவர்களுக்கு 10 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. தற்போது லலிதா 2 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2ஆம் தேதி அன்று அருண்குமார் விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று மாலை அருண்குமாரின் உறவினர் ஜெயந்தி என்பவர் லலிதாவை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்பொழுது கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததால், வெகுநேரம் தட்டிப் பார்த்தும் திறக்காததால், அருண்குமார் கதவை உடைத்துப் பார்த்துள்ளார்.
அப்போது மனைவி தூக்கிட்டு சடலமாக தொங்கியதைப் பார்த்து அருண்குமார் தப்பியோடியுள்ளார்.
பின்பு பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, தப்பியோடிய அருணை பொலிசார் தேடி வருகின்றனர்.