சித்ரா இறந்தபோது ஓட்டலில் அதை செய்யவில்லை! ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியால் சூடுப்பிடிக்கும் விசாரணை
சித்ரா மரண வழக்கில் போலீஸ் அதிகாரி சரியாக கையாளவில்லை என ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான வரதராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
சித்ரா மரணமடைந்த போது ஓட்டலில் கைரேகை நிபுணர்கள் விசாரிக்கவில்லை என்றும் அந்த இடத்தில் கைரேகை ஆதாரங்களை கைப்பற்றவில்லை என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
சித்ரா மரணம் தொடர்பாக சரியாக விசாரணை நடத்தப்படவில்லை என்றும், சிசிடிவி காட்சிகள் குறித்து ஆய்வு செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது ஹோட்டல் நிர்வாகமே வழக்கிற்கு பயந்து சிசிடிவி காட்சிகளை அழித்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
முதல்வருக்கு கோரிக்கை
சிபிசிஐடி விசாரணையில் தான் உண்மை தெரியவரும் என்று வரதாராஜன் தெரிவித்துள்ளார்.
சித்ரா போன்ற பெண்ணுக்கு நீதி கிடைக்காவிட்டால் யாருக்கு நீதி கிடைக்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர்களுக்கெல்லாம் நீதி கிடைக்காவிட்டால் எதற்கு முதல்வர் ? எதற்கு ஆளும்காட்சி முதல்வர் ஸ்டாலின் போலிஸ் நிர்வாகத்தை சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.