Cauliflower Pickle Recipe: காலிஃப்ளவர் ஊறுகாய் சாப்பிட்டிருக்கீங்களா..? இப்படி செய்து பாருங்க...
பொதுவாக ஊறுகாய் என்று சொன்னாலே அனைவருக்கும் நாக்கில் எச்சில் ஊரும். அந்தளவுக்கு ஊறுகாயின் சுவை மக்கள் மத்தியில் பரீட்சையமாகதாக இருக்கின்றது.
என்னதான் வகை வகையான கூட்டு வைத்து சாப்பிட்டலும் சிறிதளவு ஊறுகாய் வைத்து சாப்பிட்டால் தான் சாப்பிட்டது போல் இருக்கும்.
ஊறுகாயில் பல வகைகள் உள்ளது. அந்த வகைகளில், இன்று நாம் அனைவருக்கும் பிடித்த காலிஃபிளவரை வைத்து காரசாரமான ஊறுகாய் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் - 2
எலுமிச்சை - 3
மிளகாய் தூள் - தேவையான அளவு
வெந்தயப் பொடி - 1 ½ தே.கரண்டி
பெருங்காய தூள் - சிறிதளவு
கடுகு - ¼ தே.கரண்டி
எண்ணெய் - 2 ½ தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து அடுப்பில் வைத்து சூடானதும் வெந்தயத்தை போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
வறுத்த வெந்தயத்தை ஆரவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து அதை நன்றாக சலித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் காலிஃப்ளவரை சிறிய பூக்களாக நறுக்கி அவற்றை அவற்றை கழுவி சுத்தம் செய்து உப்பு சேர்த்த தண்ணீரில் 10 நிமிடங்களுக்கு ஊறவைக்க வேண்டும்.
பின்னர் தண்ணீரை வடிகட்டி காலிஃப்ளவரை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு ஆழமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து பொறியவிட வேண்டும்.
பின்னர் பெருங்காய தூள் சேர்த்து கலந்து அதனுடன் காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து மூன்று நிமிடங்களுக்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் காரத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் வெந்தயப் பொடி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இறக்கினால் காரசாரமான காலிஃப்ளவர் ஊறுகாய் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |