செல்லமாக வளர்த்த பூனைகள்! இறுதியில் பெண்ணை கொன்று தின்ற கொடுமை
பெண் ஒருவரை அவர் வளர்த்த பூனைகள் கொன்று சாப்பிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தோழி அளித்த புகார்
ரஷ்யாவில் பெண் ஒருவர் பொலிசாரை தொடர்பு கொண்டு தனது தோழி நீணட நாட்களாக அலுவலகத்திற்கு வரவில்லை எனவும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் புகாரியளித்துள்ளார்.
புகார் வாங்கிய பொலிசார் விசாரணை செய்வதற்கு குறித்த பெண் வசிக்கும் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் அவதானித்த காட்சி பேரதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
அந்த பெண்மணியை அவர் வளர்ந்த 20 பூனைகளே கொன்று சாப்பிட்டதும், இரண்டு வாரத்திற்கு முன்பு அவர் இறந்துள்ள நிலையில், பூனைகள் சூழ அவரது உடல் கிடந்துள்ளதை அவதானித்துள்ளனர்.

விசாரணையில் பகீர் உண்மை
விசாரணையில், குறித்த வீட்டில் 'Maine Coon cat' வகையை சேர்ந்த 20 பூனைகளை வளர்ந்து வந்துள்ள நிலையில், வேலை காரணமாக வெளியே சென்றவர் இரண்டு வாரங்களாக பூனைகளுக்கு சாப்பாடு கொடுக்காமல் இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சூழலில் வீடு திருப்பிய அவரை கொடூர பசியில் இருந்த பூனைகள் கொன்று அவர் உடலை உண்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அந்த பெண் இறந்த பின்னரும் பூனைகள் அவர் உடலை தின்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதில் சில பூனைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நன்றாக இருக்கும் பூனைகளை வேறு ஒருவரிடம் பொலிசார் ஒப்படைத்துள்ளனர்.
