முந்திரி சாப்பிடுவதால் என்ன ஆபத்து? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
அதிகமான சத்துக்களைக் கொண்ட முந்திரியை சாப்பிட்டால் என்ன பிரச்சினை ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முந்திரி சாப்பிடுவதால் ஆபத்தா?
முந்திரியின் சத்தான மற்றும் க்ரீம் சுவையானது நம்மை சாப்பிடத் தூண்டும் என்றாலும் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முந்திரிகள் மட்டுமே சாப்பிட வேண்டும்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், முந்திரியை அளவோடு உட்கொண்டால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை... ஆனால் கர்ப்பிணிகள் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் இதை உண்பதை தவிர்க்கவும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் முந்திரியை அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்கள் என்றால் இரண்டு வாரங்களுக்கு முன்பு முந்திரி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பச்சை முந்திரியில் உருஷியோல் என்ற நச்சுப் பொருள் உள்ளதால், அதன் ஓடுகளை அகற்றி வறுத்த பின்பே சாப்பிட வேண்டுமாம்.
ஏற்கனவே முந்திரியில் கலோரிகள் அதிகமாக இருக்கும் நிலையில் சோடியம் உட்கொள்வதைத் தடுக்க வறுத்த அல்லது உப்பு சேர்த்த முந்திரியைத் தவிர்க்கவும்.
அதே போன்று முந்திரியில் அதிக கலோரி உள்ள நிலையில், இதனை நெய், சர்க்கரை போன்றவற்றுடன் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
நீரிழிவு பிரச்சினைக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் முந்திரியை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இன்சுலின் உள்ளிட்ட மருந்துகளின் விளைவினைக் குறைப்பதுடன், சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைப்பதில் சிக்கலும் ஏற்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |