சத்துக்களை அள்ளித்தரும் முந்திரி பால்... என்னெ்னன பயன் இருக்குனு தெரியுமா?
முந்திரி அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய கொட்டைகளில் ஒன்றாகும். ஆம் உலர் பழங்கள் மற்றும் கொட்டைகள் இவை உடம்பிற்கு அதிக ஆரோக்கியத்தை அளிக்கின்றது.
இனிப்பு வகைகள், சமையல்களின் சுவைக்காக, சத்துக்காக, அலங்கரிக்க இவ்வாறு பல வகைகளில் முந்திரியை பயன்படுத்தி வருகின்றோம். இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊற வைத்தும் சாப்பிடலாம்.
முந்திரியை பால் எடுத்து சாப்பிட்டால் அதிக நன்மைகள் கிடைப்பதுடன் என்னென்ன பிரச்சினை நீங்கும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.
முந்திரி பாலின் நன்மைகள்
இடையைக் குறைப்பவர்களுக்கு முந்திரியில் உள்ள அனாகார்டிக் அமில்ம் என்ற உயிர் கலவை கொழுப்பு சேராமல் பாதுகாக்கின்றது. மாட்டுப்பாலுடன் ஒப்பிடும் போது, கலோரிகளின் அளவும் மிகவும் குறைவாகவும் உள்ளது.
முந்திரியில் இருக்கும் அனாகார்டிக் அமிலம், கார்டானால்கள், போரான் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் கலவைகள் புற்றுநோய் செல்களையும் அளிக்கின்றதாக ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்கள் முந்திரி பாலை உட்கொண்டு வந்தால் ரத்த சிவப்பணுக்கள் அதிகமாவதுடன், இரும்பு சத்து மாத்திரையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை.
கால்சியம், வைட்டமின் டி மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ளது எலும்புகளின் வலிமைக்கும் உதவி செய்கின்றது. ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கின்றது.
கொலஸ்ட்ரால் பிரச்சினையால் அவதிப்படுபவர்களும் இந்த முந்திரி பாலை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் எல்டிஎல் என்று கூறப்படும் கெட்ட பொழுப்பு பெரும்பாலும் குறையுமாம்.
முந்திரி பால் தயாரிப்பது எப்படி?
200 கிராம் முந்திரியை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் இதனை தண்ணீர் இல்லாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்பு அரைத்த விழுதை எண்ணெய் இல்லாமல் ஒரு கடாயில் வறுக்கவும், மீண்டும் இரவு முழுவதும் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.
அதன் பிறகு, இந்த பாலை காற்று புகாத கண்ணாடி கொள்கலனில் சரியாக சேமிக்கவும்.
சர்க்கரை நோயாளிகள் இந்த பாலை சர்க்கரை சேர்க்காமல் உட்கொள்ள வேண்டும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |