குழந்தைகளுக்கு சுவையான கேரட் லட்டு இப்படி செய்து கொடுங்க?
கரட்டை வைத்து நாம் பல ரெசிபிகளை செய்து பார்கலாம். கரட்டில் வைட்டமின் ஏ உள்ளது இது கண்பார்வைக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் பொதுவாக காரமான உணவுகளை உண்ண வைப்பது கடினம்.
ஆனால் இனிப்பான உணவுகளை கொடுக்கும் போது இதை முழுவதுமாக அடம்பிடிக்காமல் சாப்பிடுவார்கள் எனவே கரட்டில் உள்ள சத்துக்கள் அனைத்தும் குழந்தைகளின் உடலுக்கு கிடைப்பதற்கு கரட்டை வைத்து இனிப்பு பண்டங்களை செய்து கொடுக்க முடியும். அதற்காக கரட் லட்டு எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்கலாம்.
தேவையான பொருட்கள்
- முந்திரி
- திராட்சை
- நெய்
- ரவா -2 ஸ்பூன்
- கரட் - அரை கிலோ கிராம்
- தேங்காய் துருவியது - அரை கப்
- சீனி - அரை கப்
- ஏலக்காய் பொடி
செய்யும் முறை
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் இன்னும் கொஞ்சம் நெய் விட்டு துருவிய கரட் மற்றும் ரவா தேங்காய் சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் சீனியை சேர்க்க வேண்டும்.
இது நன்றாக கலந்து வந்ததும் லட்டுக்களாக பிடித்து வைக்க வேண்டும். இப்போது ஆரோக்கியமான சுவையான கரட் லட்டு தயார்.