ஹெச்.ஐ.வி பாதித்த பெண்ணின் உடலில் 32 வகை உருமாறிய கொரோனா வைரஸ்- அதிர்ச்சியில் மருத்துவர்கள்
ஹெச்.ஐ.வி பாதித்த பெண் ஒருவருக்கு அவரது உடலில் 32 வகை கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதம் ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பரவியது. சுமார் 216 நாட்கள் இந்தப் பெண்ணின் உடலில் கொரோனா தொற்று இருந்துள்ளது.
இந்தக் காலக்கட்டத்தில் 32 வகை உருமாற்றங்களை கொரோனா வைரஸ் அடைந்துள்ளது. மேலும், இந்தப் பெண்ணுக்கு 2006-ல் ஹெச்.ஐ.வி தொற்றியது.
அதன் பிறகு நோய் எதிர்ப்பாற்றல் படிப்படியாக குறைந்து போனது. இதனிடையே, 2020-ல் கோவிட்-19 தொற்றியது. இது அவரது உடலில் 32 வகையான உருமாற்றங்களை அடைந்துள்ளது.
இதில் கவலையளிக்கக் கூடிய E484K, ஆல்பா வகையான B.1.1.7, N510Y உள்ளிட்ட கவலையளிக்கக் கூடிய உருமாற்ற வைரஸ்களும் அவரது உடலில் காணப்பட்டன...