விடாத வரட்டு இருமலையும் விரட்டியடிக்கும் ஏலக்காய்! தினமும் டீ போட்டு குடிக்கலாமா?
பொதுவாக உணவு சமைக்கும் வாசனைக்காக ஏலக்காய் போடுவார்கள்.
ஆனால் உணவிற்கு மட்டுமல்ல இதில் டீ போட்டு குடித்தாலும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
ஏலக்காயில் உடலுக்கு தேவையான விட்டமின் ஏ, பி, சி, போன்றவை அதிக அளவில் உள்ளன.
இதனை தொடர்ந்து மனழுத்தம் பிரச்சினையுள்ளவரகள் அடிக்கடி இந்த டீயை குடித்து வருவார்கள்.
அந்த வகையில் எண்ணற்ற நோய்களுக்கு மருந்தாகும் ஏலக்காய் வரட்டு இருமலையும் விரட்டுகின்றது என்றால் நம்பமுடிகிறதா?
ஆம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மழைக்காலங்களில் இந்த வரட்டு இருமல் வரும் இதனை ஏலக்காய் டீ தினமும் குடித்து வந்தால் குணமாகும் என கிராம புறங்களில் இருக்கும் பாட்டி வைத்தியர்கள் கூறுவார்கள்.
இதன்படி, அந்த ஏலக்காய் டீ எப்படி போடுவது என தெரிந்து கொள்வோம்.
இருமலை விரட்டியடிக்கும் ஏலக்காய் டீ
தேவையான பொருட்கள்
- ஏலாக்காய் - 5
- பால் - 1 கப்
- வெந்நீர் - 1 கப்
- தேயிலைத்தூள் - 1 மேசைக்கரண்டி
- சர்க்கரை - 2 மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் ஏலக்காயை எடுத்து அதனை ஒரு உரலில் போட்டு நன்றாக இடித்து பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஏலக்காயை அதில் போட்டு கொதிக்க விட வேண்டும்.
கொதித்து கொண்டிருக்கும் போது அதில் 1 மேசைக்கரண்டி அளவு தேயிலைத்தூளை அதில் போட்டு கொதிக்க விட வேண்டும்.
அதில் பாலை ஊற்றி சுமார் 2 அல்லது 3 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பாலை கலக்கும் போது தேவையிருந்தால் சர்க்கரையும் சேர்த்து கொள்ளலாம்.
பின்னர் ஒரு வடியை வைத்து டீயை வடிக்கட்டி எடுத்தால் சுவையான ஏலக்காய் டீ தயார்!