6 வகை நோய்களை நொடிப் பொழுதில் சுகமாக்கும் சூப்பரான வீட்டு வைத்தியம்!
பொதுவாக சிலருக்கு அடிக்கடி செரிமாண பிரச்சினை, தலைவலி, நெஞ்சு சளி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
இது போன்ற பிரச்சினைகள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் குணமாகும். இதற்காக மருத்துவமனை நாட வேண்டிய தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டு சரிச் செய்துக் கொள்ளலாம்.
அந்த வகையில் 6 வகை நோய்களை மருத்துவமனை செல்லாமல் எவ்வாறு குணமாக்குவது தொடர்பில் தெரிந்துக் கொள்வோம்.
நெஞ்சு சளி அடைப்பு பிரச்சினை
பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பிரச்சினை இருக்கும். இதற்காக நாம் மருத்துவமனை செல்வதோ அல்லது ஆங்கில மருந்துக்களை உபயோகிப்பதை விட வீட்டிலுள்ள பொருட்களை வைத்து வைத்தியம் செய்வது சிறந்தது.
அந்த வகையில் சளி பிரச்சினை உள்ளவர்கள் சுத்தமான தேங்காய் எண்ணையில் சிறிதளவு கற்பூரம் சேர்த்து அந்த எண்ணெயை கொதிக்க வைத்து அது ஆறியதும் தினமும் நாம் படுக்க செல்லும் முன்பு நெஞ்சில் தடவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் காலப்போக்கில் சளி பிரச்சினை முற்றாக நீங்கும்.
தலைவலி
தலைவலி பிரச்சினை அதிகபடியான யோசனை, சளி பிரச்சினை, மனழுத்தம் மற்றும் தொலைதொடர்பு சாதனங்களின் பயன்பாடு போன்றவற்றினால் ஏற்படுகிறது.
இது போன்று ஏற்படும் போது 10 துளசி இலை எடுத்து சுக்கு சிறுதுண்டு மற்றும் லவங்கம் 2 ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு மிக்ஸியில் போட்டு அரைத்து நெற்றியில் பற்றாக போட வேண்டும் இது தலைவலியை நொடிப் பொழுதில் சரிச் செய்யும்.
செரிமாண பிரச்சினை
செரிமாண பிரச்சினைகளுக்கு வீட்டு வைத்திய முறையே சிறந்தது. ஏனெனில் இது அதிகமானால் குடற்புண் மற்றும் வயிற்றுளைவு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
செரிமாண பிரச்சினைவுள்ளவர்கள் ஒரு டம்ளர் நீரில் கறிவேப்பில்லை, இஞ்சி மற்றும் சீரகம் ஆகிய மூலிகைப் பொருட்களை ஒன்றாக சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, ஆறியதும் குடிக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்ய வேண்டும். இதனால் வயிற்றுப்பகுதி சுத்தமாகிறது.
மலச்சிக்கல்
பொதுவாக மலச்சிக்கல் பிரச்சினைகள் நமது வயிற்றில் செரிமாண பிரச்சினைகள் இருக்கும் போது தான் அதிகமாக இருக்கும். இது போன்று ஏற்படும் போது செம்பருத்தி செடியிலுள்ள இலைகளை நன்றாக காய வைத்து, அதனை பொடியாக்கி தினமும் காலையில் சாப்பிட வேண்டும். இது வயிற்றிலுள்ள கழிவுகளை அகற்றும்.
தோலிலிருக்கும் தேமல் பிரச்சினை
தேமல் பிரச்சினைவுள்ளவர்கள் வெள்ளை பூண்டை வெற்றிலையுடன் சேர்த்து நன்றாக அரைத்து, உடலில் தேமல் உள்ள இடத்தில் தேய்த்து வாரம் இரு முறை குளித்து வந்தால் காலப்போக்கில் குணமாகும். இது போன்ற பிரச்சினைகளை உடலிலுள்ள தேவையற்ற பக்கிரீயாக்கள் தான் உருவாக்கிறது. இது அழிவடையும் போது இந்நோயும் குணமடையும்.
வரட்டு இருமல்
பொதுவாக வரட்டு இருமல் சிறியர்கள் முதல் பெரியவர்கள் வரை இருக்கும். இது ஏற்படும் போது ஆரம்பத்திலே குணமாக்க வேண்டும். இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுவர்கள், எலுமிச்சப்பழ சாறுடன் சிறிதளவு தேன் கலந்து இருமல் வரும் போது குடிக்க வேண்டும். இது நெஞ்சிலிருக்கும் சளி பிரச்சினைகளை குணமாக்கும். இதனை வாரத்தில் மூன்று தடவை சரி செய்ய வேண்டும்.