இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீங்க! புற்றுநோய் எச்சரிக்கை
பொதுவாக கடந்த மூன்று ஆண்டுகளில் 10 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் புற்றுநோயால் பாதிக்கபட்டு இறந்துள்ளார்கள்.
அதிலும் மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் விந்துப்பை புற்று நோய் ஆகியவையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இதனை தடுக்கும் விதமாக மருத்துவர்கள் புற்றுநோய் அறிகுறிகள் ஆரம்பத்தில் தென்படும் போது உரிய மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்வதால் உயிர் ஆபத்தை தடுக்கலாம் என கூறுகிறார்கள்.
அந்த வகையில் யாமறியாக புற்றுநோய் அறிகுறிகள் என்னென்ன என்பதனை தெரிந்த கொள்வோம்.
புற்றுநோயின் அறிகுறிகள்
1. அளவிற்கு அதிகமான சோர்வு காணப்படும். இதனால் உங்களின் அன்றாட வேலைகளை கூட செய்து கொள்ள முடியாது. அத்துடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சோர்வானது வலி, குமட்டல், வாந்தி அல்லது மனச்சோர்வு போன்றவற்றையும் கூட ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
2. எந்தவொரு காரணமும் இல்லாமல் திடீரென உடல் எடை குறையும். இதற்கு நாம் ஏதவாது நினைத்து கொண்டு வீடுகளில் இருக்காமல் உரிய மருத்துவ சிகிச்சையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
3. லூகேமியா என்ற ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு சருமத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் தோன்றும். மேலும் சிறு சிறு ரத்த நாளங்கள் உடைவதால் இந்த தடிப்புகள் உண்டாகிறது.
4. கண்களை யாரோ திண்டியது போல் கடுமையான வலி ஏற்படும். கண்களில் புற்றுநோய் செல்கள் வளர்வதற்கான முக்கியமான ஒரு ஆரம்ப அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
5. ஆரம்பக்காலங்களில் லேசான தலைவலியாக இருந்து காலங்கள் செல்ல செல்ல இது கடுமையாக மாற ஆரம்பிக்கும். கடுமையான தலைவலி பிரச்சினையுள்ளவர்கள் உரிய மருத்துவ சிகிச்சை செய்து கொள்வது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |